இலங்கை முக்கிய செய்திகள்

எல்நினோ தாக்கும் – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அதிகம் பாதிக்கப்படும்

எல்நினோ வானிலையால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அதிகளவில் பாதிக்கப்படும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியரும் கலை பீடாதிபதியுமான நாகமுத்து பிரதிபராஜா  தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற எல்நினோ தொடர்பான செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

இந்த சமுத்திர பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள கடல் வெப்பம் இலங்கை மற்றும் மாலைதீவில் அதிக தாக்கத்தை செலுத்த வாய்ப்புகள் உள்ளது.

இலங்கையை பொறுத்தவரையில் குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார் , கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பாரிய நீருக்கான தட்டுப்பாட்டினை ஏற்படுத்தும்.

நிலத்தின் ஊடாக வெப்பத்தை கடத்துவதிலும் பார்க்க 16 மடங்கு வேகமாக நீரின் ஊடாக வெப்பம் கடத்தப்படுகின்ற நிலையில் இந்த சமுத்திரக்கடைபரப்பில் ஏற்படுகின்ற கடல் வெப்ப ஏற்றம் வேகமாக ஏனைய பகுதிகளுக்கும் பரவும்.

ஜூலை செப்டம்பர் மாதங்களில் அதிகமான வறட்சியை ஏற்படுத்துகின்ற எல்நினோ அக்டோபர் நவம்பர் மாதங்களில் பாரிய மழை வீழ்சியையும் ஏற்படுத்தும்.

ஆகவே எல்நினோ இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில் பொதுமக்கள் நீர் முகாமைத்துவத்தை சரியாகப் பின்பற்றி அதிக வெப்பத்தினால் ஏற்படுகின்ற நீர்த்தட்டுப்பாட்டினை சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன் வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்