இலங்கை

இலங்கையில் சீமெந்து உள்ளிட்ட பொருட்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

  • June 14, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. இந்த நிலையில், சீமெந்து உள்ளிட்ட கட்டட நிரமாணத்துறைசார் பொருட்களின் விலை, 25 சதவீதத்தினால் குறைவடைய வேண்டும் என நிரமாணத்தறை வல்லுனர்கள் சபையின் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். விலை குறைக்கப்படாதுள்ளமையால், உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் பாரிய அளவில் இலாபம் ஈட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விலை அதிகரிப்பின் காரணமாக, தரமற்ற கம்பிகள் மற்றும் வர்ணப் பூச்சுகள் என்பன சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

ஆசியா

சிங்கப்பூரில் வேலை செய்த இடத்தில் கைவரிசை காட்டிய இளைஞனுக்கு நேர்ந்த கதி

  • June 14, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் 2 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 24 வயதுடை ஊழியரை சிங்கப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். வல்லிச் ஸ்ட்ரீட்டில் அமைந்துள்ள உடற்பயிற்சி கூடத்தில், கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி மாலை 6:30 மணியளவில், விலையுயர்ந்த கைக்கடிகாரம் திருடப்பட்டது குறித்து பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, உடற்பயிற்சி கூடத்தின் ஊழியரான ஹோவர்ட் லாம் வென் ஜுன் என்பவரை பொலிஸார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், அவர் இரண்டு தனித்தனி சம்பவங்களில் சுமார் 173,000 சிங்கப்பூர் டொலர் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

டுவிட்டர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு – அறிமுகமாகும் புதிய வசதி

  • June 14, 2023
  • 0 Comments

டுவிட்டர், ப்ளூடிக் உள்ள பயனர்கள் தங்களை பின் தொடராமல் இருப்பவர்களுக்கு நேரடியாக செய்திகளை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது. உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து புதுப்புது மாற்றங்களை செய்து பயணங்களை முறைப்படி வைத்து வருகிறார் அந்த வகையில் தற்பொழுது, டுவிட்டர் இந்த வாரத்தில் ஒரு புதிய அப்டேட்டை வெளியிடும் என்று கூறியுள்ளார். அது என்னவென்றால், ப்ளூடிக் உள்ள பயனர்கள் மட்டுமே தங்களை பின் தொடராமல் இருப்பவர்களுக்கு நேரடியாக செய்திகளை அனுப்ப முடியும். ப்ளூடிக் […]

உலகம்

பதற்றத்தில் உலகம் – அணுவாயுதங்களை குவிக்கும் நாடுகள்

  • June 14, 2023
  • 0 Comments

உலகின் சில நாடுகள் அணுவாயுத இருப்பைப் பெருக்கி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. உலகில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. பயன்பாட்டுக்கு ஏற்ற அத்தகைய 9,500 ஆயுதங்களை உலக நாடுகள் சேகரித்து வைத்துள்ளதாக ஸ்டாக்ஹோல்ம் அனைத்துலக அமைதி ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது. சீனா அதன் ஆயுதங்களைப் பெருமளவு அதிகரித்துள்ளதாகக் கழகம் கூறியது. இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா ஆகியவையும் கூடுதல் ஆயுதங்களைப் பெற்றிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. எனினும் ரஷ்யாவும், அமெரிக்காவும் இன்னும் உலகின் சுமார் 90 […]

ஆஸ்திரேலியா

குறட்டை விடும் கணவர் – 8 வருடங்களாக கணவனை தவிர்க்கும் மனைவி – ஆஸ்திரேலியாவில் சம்பவம்

  • June 14, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் கடந்த 8 ஆண்டுகளாக தனது கணவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளவில்லை என பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். கோல்ட் கோஸ்ட்டில் வசிக்கும் மோடல் அழகி கோல் ஜப்பானோவ்ஸ்கி என்பவரே இதனை குறிப்பி்டுள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர், சமீபத்தில் தனது சமூக ஊடக பக்கத்தில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “கடந்த 8 ஆண்டுகளாக ஒரே படுக்கையில் எனது கணவர் ஓர்வலுடன் படுத்து தூங்கவில்லை. அவர் தூங்கும் போது குறட்டை விடுகிறார். அது […]

ஐரோப்பா

ஜெர்மனி மக்களின் நலனுக்காக புதிதாக திறக்கப்படும் அலுவலகம்!

  • June 14, 2023
  • 0 Comments

ஜெர்மனி மக்களின் நலனுக்காக புதிதாக திறக்கப்படும் அலுவலகம் ஜெர்மனியில் போதை பொருள் தரமானதா அல்து தரமற்றதா என்பதை பரிசோதனை செய்வதற்கு ஒரு அலுவலகம் நிருவப்பட்டுள்ளது. போதை பொருள் பாவணையானது சட்ட விரோதமான செயல் ஆகும். ஜெர்மனிய நாட்டில் பேதை பொருள் பாவணையாளர்களின் எண்ணிக்கையானது அதிகரித்தே காணப்படுகின்றது. இந்நிலையில் ஜெர்மனி நாட்டின் பேர்ளினில் போதை பொருட்களை பாவிப்பவர்கள் போதை பொருளானது தரமானதா அல்லது தரமற்றதா என்பது தொடர்பில பரிசீலணை செய்வதற்கு கு சில அமைப்புக்கள் நிருவப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது […]

இலங்கை

இலங்கையில் மதுபோதையில் பிக்கு அட்டகாசம்

  • June 14, 2023
  • 0 Comments

ஊராபொல பிரதேசத்தில் மது அருந்தி போதை ஏறிய நிலையில், பிக்கு ஒருவர் குழப்ப ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார். இந்த பௌத்த பிக்கு இசை நிகழ்ச்சி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பௌத்த பிக்குகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை இருக்கவில்லை என அத்தனகல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதுபோதையில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்ட பௌத்த பிக்கு, இசை நிகழ்ச்சியை காண சென்றிருந்த சிலருடன் தகராறை ஏற்படுத்திக்கொண்டுள்ளார். இதன் போது பொலிஸார் தலையிட்டு பௌத்த […]

இலங்கை

பிரான்ஸில் அதிர்ச்சி – ஒரே நாளில் 20,000 மின்னல் தாக்குதல்கள்

  • June 14, 2023
  • 0 Comments

பிரான்ஸில் ஒரே நாளில் 20,000 மின்னல் தாக்குதல்கள் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களில் 3 வாரங்களின் பின்னர் வெள்ளபெருக்கும் ஏற்படுத்தும் அளவிற்கு திடீர் மழை பெய்தது. இரு வாரங்களுக்கான மழையை ஒரு சில நிமிடங்களில் கொட்டித்தீர்த்து வெள்ளம் ஏற்பட்டது. அதேவேளை, ஒரே நாளில் 20,000 மின்னல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. பரிஸ், Toulouse மற்றும் Burgundy ஆகிய நகரங்களில் இந்த மின்னல் தாக்குதல்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன.

ஆப்பிரிக்கா செய்தி

நைஜீரியாவில் நைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 100 பேர் உயிரிழந்தனர்

  • June 13, 2023
  • 0 Comments

நைஜீரியாவில் திங்கள்கிழமை குவாரா மாநிலத்தில் நைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் சுமார் 100 பேர் உயிரிழந்தனர். காவல்துறை மற்றும் குடியிருப்பாளர்களின் கூற்றுப்படி, இறந்தவர்கள் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள், அவர்கள் எக்போடி கிராமத்தில் ஒரு திருமணத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். பெரிய ஆற்று அலைகளால் படகு மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இறந்தவர்களில் பல பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். அசோசியேட்டட் பிரஸ் படி, எவரும் உயிர் பிழைத்திருக்கிறார்களா என்பது தெளிவாக இல்லை. பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஒகசன்மி அஜய் செவ்வாய்க்கிழமை […]

ஆசியா செய்தி

ஆப்கானிஸ்தானில் ஏழு மாகாணங்களில் 6 பேர் வெள்ளத்தில் சிக்கி பலி

  • June 13, 2023
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் சமீபத்திய மழை மற்றும் வெள்ளத்தின் விளைவாக ஏழு மாகாணங்களில் 6 பேர் இறந்துள்ளனர் மற்றும் 8 பேர் காயமடைந்துள்ளனர். தலிபான் தலைமையிலான இயற்கை பேரிடர் மேலாண்மை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷஃபியுல்லா ரஹிமி, ஆப்கானிஸ்தானின் பல மாகாணங்களை பாதித்த வெள்ளத்தின் போது ஆறு பேர் இறந்துள்ளனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்தார். இருப்பினும், 30 வீடுகள் இடிந்தன மற்றும் 800 க்கும் மேற்பட்ட விலங்குகள் வெள்ளத்தால் இறந்தன என்று தலிபான் தலைமையிலான அமைச்சகத்தின் […]