பிலிப்பைன்ஸில் பருவமழை தாக்கம் – 06 பேர் உயிரிழப்பு, இலட்சக்கணக்கானோர் பாதிப்பு
பிலிப்பைன்ஸில் பருவமழை மற்றும் வெப்பமண்டலப் புயல்களின் தாக்கத்தால் 06 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 07 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் 8 பிராந்தியங்களில் உள்ள 110,000 குடும்பங்களைச் சேர்ந்த 382,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இந்தப் பேரழிவின் காரணமாக 148-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




