ஐரோப்பா

போர் முனையில் 50,000 வடகொரிய வீரர்கள் களமிறக்கப்படுவார்கள் – ஜெலென்ஸ்கி எச்சரிக்கை

ரஷ்யாவிற்காகப் போரிட, 50,000 வரையிலான வட கொரிய வீரர்கள் ரஷ்யாவில் நிலைநிறுத்தப்படுவார்கள் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

வானொலி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், “ரஷ்யாவின் எல்லைக்குள் 30,000 முதல் 50,000 வரையிலான வட கொரியர்களை நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஜுலை மாதத்தில் 30000 வடகொரிய வீரர்கள் நிலைநிறுத்தப்படுவார்கள் என மதிப்பிட்டிருந்த நிலையில் அந்த எண்ணிக்கையைவிட தற்போது அதிகளவிலான வீரர்கள் களமிறக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

(இந்தத் தகவலை அவர் எவ்வாறு பெற்றார் என்பது குறித்து அவர் விரிவாகக் கூறவில்லை.)

அதேநேரம் உக்ரைனின் எல்லைக்குள் சில வட கொரிய ஏவுகணைகளை கீவ் கண்டறிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“வட கொரியா நவீன போர்முறையில் தனது அனுபவத்தைத் தொடர்ந்து வளர்த்துக் கொள்ளும் எனக் கூறிய ஜெலன்ஸ்கி, ரஷ்யாவிடமிருந்து உரிமங்களைப் பெறும், மேலும் அவர்களிடமிருந்து அனைத்து வகையான இராணுவக் கருவிகளையும் பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில்  வான்பாதுகாப்பு ஏவுகணைகளை தருமாறு தென்கொரியாவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்