இலங்கை

இலங்கையில் மதுபோதையில் பிக்கு அட்டகாசம்

ஊராபொல பிரதேசத்தில் மது அருந்தி போதை ஏறிய நிலையில், பிக்கு ஒருவர் குழப்ப ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.

இந்த பௌத்த பிக்கு இசை நிகழ்ச்சி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பௌத்த பிக்குகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை இருக்கவில்லை என அத்தனகல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதுபோதையில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்ட பௌத்த பிக்கு, இசை நிகழ்ச்சியை காண சென்றிருந்த சிலருடன் தகராறை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.

இதன் போது பொலிஸார் தலையிட்டு பௌத்த பிக்குவை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அந்த பிக்கு பொலிஸார் சிலரையும் தாக்கியுள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் பதற்றமாக நடந்துக்கொண்ட சந்தேக நபர், அங்கிருந்த கண்ணாடி ஒன்றை தாக்கி உடைத்துள்ளார்.

இதனால், அவரது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளதுடன் அவரை வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்