பொழுதுபோக்கு

விடாமுயற்சியில் ரஜினிகாந்தா? அஜர்பைஜானில் என்ன கோலத்தில் இருக்காரு பாருங்க

  • October 4, 2023
  • 0 Comments

லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ள விடாமுயற்சி திரைப்படம் அஜார் பைஜானில் ஆரம்பமாக உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்கப் போவதாக வதந்திகள் கிளம்பியுள்ளன. ஏஐ எனும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் கொண்டு ஏகப்பட்ட புகைப்படங்களை தத்ரூபமாக உருவாக்கி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அஜித்குமார் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு அஜர் பைஜானில் ஹாலிடே மோடில் இருக்கும்படியான புகைப்படங்கள் […]

ஆசியா

மாலைத்தீவிலிருந்து வெளிநாட்டு ராணுவம் வெளியேற்றப்படும் – முகமது முயீஸ் அதிரடி

  • October 4, 2023
  • 0 Comments

மாலைத்தீவில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு ராணுவம் உடனடியாக வெளியேற்றப்படும் என, அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள முகமது முயீஸ் தெரிவித்துள்ளார். தெற்காசிய நாடான மாலைத்தீவில் அண்மையில் அதிபர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த முகமது முயீஸ் வெற்றி பெற்று அந்நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ளார். வெற்றிக்கு பிந்தைய முதல் பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது, ”மாலைத்தீவில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு ராணுவ படைகள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றப்படும்” என தெரிவித்தார். […]

வட அமெரிக்கா

இந்தியாவுடன் நெருக்கமான உறவைத் தொடர விரும்பும் கனடா!

  • October 4, 2023
  • 0 Comments

இந்தியாவுடன் மோதல் போக்கை அதிகரிக்க கனடா விரும்பவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், கனடாவும் அதன் நட்பு நாடுகளும் இந்தியாவுடன் தொடர்ந்து நல்ல உறவில் இருப்பது மிகவும் முக்கியமானது என்றார். இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார நாடு என்று குறிப்பிட்ட ட்ரூடோ, நெருக்கமான உறவுகளை உருவாக்குவதில் தாம் தீவிரமாக இருப்பதாகவும் தெரிவித்தார். அதே நேரத்தில் நிஜ்ஜார் கொலையில் முழு உண்மைகளையும் தாங்கள் பெறுவதை இந்தியா உறுதிசெய்ய வேண்டும் […]

இலங்கை

நீதி துறைக்கு ஏற்பட்டுள்ள சவால் – மன்னாரில் ஒன்று திரண்ட சிவில் சமூக அமைப்புக்கள்

  • October 4, 2023
  • 0 Comments

நாட்டில் நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் மற்றும் சவால்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவும் அதே நேரம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கோரியும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மன்னார் சிவில் சமூக அரசியல் பிரதிநிதிகள் கவனயீர்ப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர். மன்னார் நகர பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய சிவில் சமூக மற்றும் அரசியல் பிரதிநிதிகள் இலங்கையில் தொடர்ச்சியாக சட்டத்துறை மற்றும் நீதித்துறை எதிர்கொண்டு வரும் அழுத்தங்கள் மற்றும் சவால்கள் உடனடியாக முடிவுக்கு கொண்டு […]

இலங்கை

முல்லைத்தீவு நீதிபதி விலகல் – தொடரும் முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் பணிப்பகிஷ்கரிப்பு

  • October 4, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் நேற்று முந்தினம் (02) ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று(04) மூன்றாவது நாளாக தொடர்கிறது நீதி துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைகளும் உறுதி செய்யப்படும் வரை பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் மேற்கொண்டதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் த. பரஞ்சோதி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார் அதற்கமைய நேற்று முன்தினம் (02) ஆரம்பித்த காலவரையறையின்றிய […]

பொழுதுபோக்கு

கட்டிப்பிடித்து பாலியல் துன்புறுத்தல்… பிக்பாஸ் 7 பெண் போட்டியாளர் மீது புகார்.. தூசுதட்டப்படும் பழைய கதை

  • October 4, 2023
  • 0 Comments

பிக்பாஸ் 7ல் கலந்துகொண்டிருக்கும் மாயா கிருஷ்ணன் மீது பெண் கொடுத்த பாலியல் புகார் குறித்த தகவல் மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. இந்த சீசன் போட்டியாளர்களில் மாயா கிருஷ்ணனும் கடினமான போட்டியாளராக இருப்பார் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் அவரை பற்றிய பழைய விஷயம் ஒன்று மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. மாயா கிருஷ்ணன் அடிப்படையில் நாடக கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கென்று தனியாக நாடக குழு இருக்கிறது. நாடகம் மட்டுமின்றி வானவில், தொடரி, மகளிர் மட்டும், விக்ரம் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் […]

இலங்கை

காணி அபகரிப்பு செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும் – எம்.எஸ் தௌபீக் எம்.பி தெரிவிப்பு

  • October 4, 2023
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தவரையில் காணிப்பிரச்சினையானது எல்லா பிரதேசத்திலும் காணப்படுகிறது. சென்றவாரம் புல்மோட்டை பிரதேசத்தில் அம் மக்களுக்கு சொந்தமான காணிகள் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என வர்த்தமானி வெளியிட்டு அக்காணிகளை அபகரிப்பதற்கு முயற்சிப்பதாகவும் சட்டவிரோத காணி அபகரிப்பு செயற்பாடுகளை உடன் நிறுத்தவேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் செவ்வாய்க்கிழமை (3) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், இவ்வாறான சட்டவிரோத காணி அபகரிப்புக்கள் தொடர்பில் நாங்கள் காணி அமைச்சர், பிரதமர் மற்றும் […]

ஆசியா

பேங்கொக் வணிக வளாகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் – சிறுவன் கைது

  • October 4, 2023
  • 0 Comments

பேங்கொக் வணிக வளாகமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பில் தொடர்பில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டினால் இருவர் உயிரிழந்துள்ளதோடு, ஐவர் காயமடைந்துள்ளாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. உயிரிழந்த இருவரும் சீனா மற்றும் மியன்மார் பிரஜைகள் என தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வணிக வளாகத்திற்கு அருகாமையிலுள்ள பாடசாலையொன்றில் குறித்த சிறுவன் கல்வி கற்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த தாக்குதலை […]

ஐரோப்பா

புலம்பெயர்ந்தோருக்கான வாழ்வாதாரத் தேவையை உயர்த்த தயாராகும் ஸ்வீடன் அரசாங்கம்

  • October 4, 2023
  • 0 Comments

ஸ்வீடன் அரசாங்கம் தொழிலாளர் புலம்பெயர்ந்தோருக்கான வாழ்வாதாரத் தேவையை உயர்த்த முடிவு செய்துள்ளது. ஒரு தொழிலாளர் புலம்பெயர்ந்தோர் நாட்டின் சராசரி சம்பளத்தில் குறைந்தது 80 சதவீத வருமானத்தை ஈட்ட வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இதற்கான சட்டம் மற்றும் ஒழுங்குமுறை மாற்றம் நவம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஸ்வீடிஷ் நீதி அமைச்சகத்தின் செய்திக் குறிப்பின்படி, புதிய நடவடிக்கை குறைந்த திறன் கொண்ட தொழிலாளர் குடியேற்றம் மற்றும் மோசடி மற்றும் தொழிலாளர் குடியேற்றத்துடன் தொடர்புடைய தவறான செயற்பாடுகள் ஆகியவற்றைக் […]

வாழ்வியல்

பப்பாளியுடன் சாப்பிடக் கூடாத ‘சில’ உணவுகள் – எச்சரிக்கை பதிவு

  • October 4, 2023
  • 0 Comments

பப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது என்பதோடு இனிப்பானது சத்துக்களுக்கு குறைவே இல்லை. பப்பாளி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த பழம் வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதை சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும் . சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துதல், முதுமையைத் தடுப்பது உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளன. பப்பாளி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், ஆனால் அதை சாப்பிட்ட பிறகு, தவிர்க்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. பப்பாளியை சாப்பிட்ட பிறகு, சில உணவுகளை […]