இலங்கை

முல்லைத்தீவில் தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு நிலக்கடலை வழங்கி வைப்பு

  • October 4, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு இன்றையதினம் (04) கொக்குதொடுவாய் கமநல சேவைகள் நிலையத்தில் வைத்து நிலக்கடலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் கமநல சேவைகள் நிலையத்திற்குட்பட்ட கொக்குத்தொடுவாய், கருநாட்டுகேணி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு ஒரு ஏக்கர் பயிர்செய்கைக்கான தலா 50 கிலோ விதை நிலக்கடலை உள்ளீடுகளும் அத்துடன் ஆரம்ப கட்ட நிலபண்படுத்தலுக்காக சிறு தொகை கொடுப்பனவும் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் நிதி பங்களிப்பில் கொக்குதொடுவாய் […]

இலங்கை

இலங்கையில் மழையுடனான வானிலையே நீடிக்கும் : ஏராளமான மக்கள் பாதிப்பு!

  • October 4, 2023
  • 0 Comments

இலங்கையில் தற்போது பெய்து வருகின்ற மழையானது இன்னும் சில நாட்களுக்கு நீட்டிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்காரணமாக நில்வல ஆறு பெருக்கெடுத்து சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடும் மழையுடனான வானிலை காரணமாக  12 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் நீர்கொழும்பில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் இந்த எண்ணிக்கை 97 மில்லிமீற்றராக பதிவாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கை

மேலும் சில பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்!

  • October 4, 2023
  • 0 Comments

67 வர்த்தக வாகனங்கள் மற்றும் 299 HS குறியீடுகளுக்கு உட்பட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (04.10) விசேட அறிக்கையொன்றை விடுத்த அவர், தனியார் வாகனங்கள் தொடர்பான 304 HS குறியீடுகளின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை எனத்  தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “தற்போதுள்ள அந்நிய செலாவணி பற்றாக்குறை மற்றும் மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை […]

இலங்கை

ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

  • October 4, 2023
  • 0 Comments

ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி,  மற்றும் எதிர்க்கட்சிகளின் செயற்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு குறித்த ஆணையத்தை நியமித்தல், அதன் உறுப்பினர்களை நியமிக்க ஜனாதிபதியின் அதிகாரங்களுக்குள் தொடர்புடைய சட்டத்தில், நிர்வாகத்தை தன்னிச்சையாக செயல்பட தூண்டுகிறது. இந்நிலையில் குறித்த சட்டமூலமானது வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறித்த மனுவை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர்  ரஞ்சித் மத்துமபண்டார, எதிர்க்கட்சி […]

இலங்கை

செட்டிக்குளம் பகுதியில் உள்ள ஆலயத்தின் சிலைகள் விஷமிகளால் பெயர்த்தெடுப்பு!

  • October 4, 2023
  • 0 Comments

வவுனியா செட்டிக்குளம் வீரபும் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய சிலைகள் விஷமிகளின் செயற்பாட்டால் அவ்விடத்தில் இருந்து பெயர்த்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் நவக்கிரக விக்கிரகங்கள்,மற்றும் வைரவர்,முருகன்,அம்மன் விக்கிரகங்கள் இருப்பிடங்களில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. இன்று (04.10) காலை வழமைபோல் பூஜையை மேற்கொள்வதற்காக ஆலயத்தின் குருக்கள் அங்கு சென்றபோது, சிலைகள் சேதமாக்கப்பட்டுள்ளதை அவதானித்து ஆலய நிர்வாகிகளுக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து ஆலயத்தின் நிர்வாகிகள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன், பொலிஸார் சம்பவ இடத்தை ஆராய்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை

ரயில்கள் தாமதமாகலாம் : பயணிகளுக்கு அறிவுறுத்தல்!

  • October 4, 2023
  • 0 Comments

மாளிகாவத்தை புகையிரத வீதியில் இருந்து புறப்படும் புகையிரதங்கள் சில தாமதங்களை எதிர்கொள்ளலாம் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ரயில் ஊழியர்கள் தாக்குதல் சம்பவம் ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதால் குறித்த தாமதம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாளிகாவத்தை ரயில்வே முற்றத்தில் பணிபுரியும் சக ஊழியர் ஒருவருக்கும், ஊழியர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பைத் தொடர்ந்து, பாதுகாப்புக் காரணங்களுக்காக ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் மாளிகாவத்தை ரயில் முற்றத்திற்குச் செல்ல மறுத்ததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இது […]

பொழுதுபோக்கு

துள்ளி குதித்து பிரபாஸை அறைந்த ரசிகை.. இணையத்தில் லீக்காகி ட்ரெண்டாகும் வீடியோ

  • October 4, 2023
  • 0 Comments

பிரபல நடிகர் பிரபாஸை ரசிகை ஒருவர் பொது இடத்தில் வைத்து கன்னத்தில் அடித்த வீடியோ ட்ரெண்டாகியுள்ளது. தெலுங்கில் மட்டும் அறியப்பட்ட பிரபாஸ் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டார். அந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பான் இந்தியா ஸ்டாராக வலம் வர ஆரம்பித்த அவர் கடைசியாக ஆதிபுருஷ் படத்தில் நடித்தார். பாகுபலி போல் நிச்சயம் இந்தப் படமும் தனக்கான அடையாளமாக மாறும் என்ற பெரும் நம்பிக்கையில் அவர் இருந்தார். […]

பொழுதுபோக்கு

சத்தமின்றி, ஆர்ப்பாட்டமின்றி வந்து சாதனை மாஸ் காட்டிய “சித்தா”

  • October 4, 2023
  • 0 Comments

ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2, ஜெயம் ரவியின் இறைவன் படங்களுக்குப் போட்டியாக களமிறங்கிய சித்தார்த் நடித்துள்ள ‘சித்தா’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில், படத்தின் பட்ஜெட்டுக்கு இரண்டு மடங்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. அருண் குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் சித்தா. மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக திரையுலகில் தனது கேரியரை தொடங்கியவர் சித்தார்த். ஆனால், ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, […]

இலங்கை

மஸ்கெலியாவில் 30 அடி பள்ளத்தில் பாய்து விபத்துக்குள்ளான கெப் வாகனம்!

  • October 4, 2023
  • 0 Comments

மஸ்கெலியா, சாமிமலை பகுதியில் கெப் வண்டியொன்று பள்ளத்தில் விழுந்து விபத்க்குள்ளானதில்,  குறைந்தது 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாமிமலை 3ஆம் மைல் பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கெப் வண்டி 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் கெப் வாகனத்தின் சாரதி, 12 பெண்கள் மற்றும் 02 ஆண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா

உணவுடன் சேர்த்து தாலியை விழுங்கிய எருமை மாடு: அறுவை சிகிச்சை மூலம் மீட்ட மருத்துவ குழுவினர்

  • October 4, 2023
  • 0 Comments

மகாராஷ்டிராவில் உணவுடன் சேர்த்து தாலி செயினை விழுங்கிய எருமை மாட்டுக்கு அறுவை சிகிச்சை செய்து, தங்க நகை மீட்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில், வசிம் மாவட்டம் சார்சி கிராமத்தில் உள்ள தம்பதியினர் ராம் ஹரி மற்றும் கீதா பாய். இவர்கள் வீட்டில் எருமை மாடு வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், வீட்டில் உள்ள எருமை மாட்டுக்கு கீதா தான் உணவு வைப்பார். கீதா பாய் எருமை மாட்டுக்கு உணவு அளிக்கும் போது, அதில் தாலி செயின் கழன்று விழுந்துள்ளது. அப்போது, உணவுடன் […]