இலங்கையில் முழு அளவில் சமூக வலைத்தள பாவனையை தடைசெய்யப்படாது
வன்முறைகளையும் தூண்டும் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சீனாவைப் போன்று சமூக வலைத்தள பாவனையை முற்றாக தடை செய்ய வேண்டும் என்பது எமது இலக்கல்ல. போலி தகவல்கள் மற்றும் செய்திகளை பரப்புவதன் ஊடாக இன, மத மோதல்களையும் வன்முறைகளையும் தூண்டும் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும். நிகழ்நிலை காப்பு சட்ட மூலத்தின் ஊடாக […]













