அறிவியல் & தொழில்நுட்பம்

யூடியூப் தளத்தின் விசேட அறிவிப்பு – பொதுப் பார்வைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் முறையில் மாற்றம்

யூடியூப் தளம்  தனது வீடியோக்களுக்கான பொதுப் பார்வைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் முறையை மாற்றுவதாக அறிவித்துள்ளது.

தங்கள் வீடியோக்கள் எவ்வாறு செயல்பட்டுள்ளன என்பதை உருவாக்குநர்கள் மதிப்பிடும் அளவீடுகளைச் சீரமைக்கும் முயற்சியாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இம் முயற்சியானது ஆகஸ்ட் 24 முதல்,  நடைமுறைக்கு வரும். வீடியோ இயங்கத் தொடங்கும் கணத்திலிருந்தே பார்வைகள் கணக்கிடப்படும்.

கூகிள் ஊழியர் ஒருவர் யூடியூப் உதவிப் பக்கத்தில் இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தினார். மேலும், இந்த மாற்றம் உருவாக்குநர்களின் வருமானத்தையோ அல்லது அவர்கள் யூடியூப் பார்ட்னர் திட்டத்திற்கு (YPP) தகுதி பெறுவதையோ பாதிக்காது என்றும் கூறினார்.

பல்வேறு வடிவங்களில் பல பார்வை கணக்கிடும் முறைகளைப் பயன்படுத்தியதை அந்நிறுவனம் ஒப்புக்கொண்டாலும், உருவாக்குநர்கள் தங்கள் வீடியோக்களின் பரவலைக் கணக்கிடும்போது குழப்பம் குறைவாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாகக் குறிப்பிட்டது.

இருப்பினும், “ஈடுபட்ட பார்வைகள்” (Engaged views) எனப்படும் நிறுவனத்தின் அசல் பார்வை அளவீடு தொடர்ந்து அணுகக்கூடியதாக இருக்கும். மேலும், உருவாக்குநர்களின் வருமானம் “ஈடுபட்ட குறும்படப் பார்வைகள்” (Engaged Shorts views) மற்றும் “ஈடுபட்ட பார்வை நேரங்கள்” (Engaged Watch Hours) ஆகிய அளவீடுகளின் அடிப்படையிலேயே தொடர்ந்து கணக்கிடப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்