இந்தியாவுடன் நெருக்கமான உறவைத் தொடர விரும்பும் கனடா!
Mar 24, 2023; Miami, Florida, US; A fan wears a Canadian flag headband in the stands during the match between Leylah Fernandez (CAN) and Bencic (SUI) (both not pictured) on day five of the Miami Open at Hard Rock Stadium. Mandatory Credit: Geoff Burke-USA TODAY Sports – 20312003
இந்தியாவுடன் மோதல் போக்கை அதிகரிக்க கனடா விரும்பவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய அவர், கனடாவும் அதன் நட்பு நாடுகளும் இந்தியாவுடன் தொடர்ந்து நல்ல உறவில் இருப்பது மிகவும் முக்கியமானது என்றார்.
இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார நாடு என்று குறிப்பிட்ட ட்ரூடோ, நெருக்கமான உறவுகளை உருவாக்குவதில் தாம் தீவிரமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதே நேரத்தில் நிஜ்ஜார் கொலையில் முழு உண்மைகளையும் தாங்கள் பெறுவதை இந்தியா உறுதிசெய்ய வேண்டும் என்றும் ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டார்.





