இலங்கை

திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதியில் பாரிய விபத்து

  • October 6, 2023
  • 0 Comments

திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி பம்மதவாச்சி பகுதியில் இன்று (06) இடம்பெற்ற விபத்தில் இரு சாரதிகளும் காயமடைந்துள்ளனர். ஹொரவ்பொத்தானை பகுதியில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த பவுசரும், திருகோணமலையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சீமெந்து லொறியும் மோதியதினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் இரண்டு சாரதிகளும் காயங்களுக்கு உள்ளானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் கலக்கம் காரணமாக லொறி வீதியின் குறுக்கே சென்றதால் முன்னே நோக்கி வருகை […]

ஆசியா

மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்… விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரித்த பிலிப்பைன்ஸ்

  • October 6, 2023
  • 0 Comments

பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் விமானம் ஒன்றில் வெடிகுண்டு வெடிக்கும் என மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டலை அடுத்து 42 விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மின்னஞ்சலின் நம்பகத்தன்மை குறித்து விசாரிக்கவும் பிலிப்பைன்ஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் பயணிகள் விமான போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமை இந்த விவகாரம் தொடர்பில் தெரிவித்துள்ளது. நாட்டின் அனைத்து வணிக ரீதியான விமான நிலையங்களிலும் உடனடியாக மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டதாக விமான போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் விடுக்கப்பட்ட வெடிகுண்டு […]

இந்தியா

பத்து தலைகளுடன் ராகுல் காந்தி ; போஸ்டர் மூலம் காங்கிரஸ் – BJP இடையே மோதல்

  • October 6, 2023
  • 0 Comments

காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியை பல தலைகள் கொண்ட ராவணனாக சித்தரித்து பாரதிய ஜனதாக கட்சி ஒட்டியுள்ள போஸ்டருக்கு காங்கிரஸின் ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி அதன் எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி குறித்து மிகப்பெரிய பொய்யர் என்றும், ஜூம்லா பாய் விரைவில் தேர்தல் பேரணியில் அடித்துச் செல்லப்பட இருக்கிறார் என்றும் போஸ்டர் வெளியிட்டது. இதற்கு அடுத்த நாளே, பாஜக தனது எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தியை ராவணனாக […]

ஐரோப்பா

ஸ்காட்லாந்தில் ராணுவ தளபதியாக பட்டம் பெற்ற பென்குயின்…!

  • October 6, 2023
  • 0 Comments

ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் மிருகக்காட்சி சாலையில் ஒரு பிரபலமான பென்குயின், ராணுவ தளபதியாக பதவி வழங்கப்பட்டதன் மூலம் உலகின் மிக உயர்ந்த விலங்காக உயர்த்தப்பட்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் விலங்கியல் பூங்காவில் பென்குயின் பறவை ராணுவ தளபதியாக பொறுப்பேற்கும் விழா அண்மையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதில் சார் நில்ஸ் ஓலவ் 3 என்ற ராஜா வகை பென்குயின், தற்போது அந்நாட்டின் ராணுவ மேஜர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ளது. இந்த பென்குயினுக்கு […]

பொழுதுபோக்கு

ரோகிணி திரையரங்கை பந்தாடிய தளபதி விஜய் ரசிகர்கள்

  • October 6, 2023
  • 0 Comments

தளபதி விஜய் நடித்த, ‘லியோ’ படத்தின் டிரைலர் ரோகிணி திரையரங்கில் வெளியிடப்பட்ட நிலையில், ரசிகர்கள் ஆரவாரம் செய்து திரையரங்கையே துவம்சம் செய்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள, ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியானது. தளபதி ரசிகர்களின் வேண்டுகோளுக்காகவும், அவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாகவும், ரோகிணி திரையரங்கில் […]

இலங்கை

சபைக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டமைப்பினர்

  • October 6, 2023
  • 0 Comments

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக இன்று பாராளுமன்ற அமர்வுகள் சிறிது நேரம் முடங்கியது. மட்டக்களப்பில் மாடு வளர்ப்பதற்காக மக்கள் பயன்படுத்திய காணிகளை வெளியாட்கள் சிலர் அபகரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பதாதைகளை ஏந்தியவாறு சபையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். சாணக்கியன் ராசமாணிக்கம் தலைமையிலான எம்.பி.க்கள் குழு “அழிக்காதே, அழிக்காதே, எங்கள் நிலத்தை எங்களுக்கு கொடு! (எங்களைத் தாக்குவதை நிறுத்துங்கள்,எங்கள் நிலங்களை எங்களிடம் திருப்பி விடுங்கள்) என்றும் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் […]

இலங்கை

இலங்கையை களங்கப்படுத்தும் செயற்பாடுகளை தமிழ் கட்சியினர் முன்னெடுப்பதாக குற்றச்சாட்டு!

  • October 6, 2023
  • 0 Comments

இலங்கை தொடர்பில் மேற்குலக நாடுகளுக்கு போலியான தகவல்களை வழங்கி நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்தும் வேலையை வடக்கில் உள்ள தமிழ் கட்சிகள் செய்துவருவதாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளரான சாகர காரியவசம் தெரிவித்தார். ஜேர்மன் தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி அளித்த பேட்டி தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலுமை் கருத்து வெளியிட்ட அவர்,  ஆயுத போராட்ட காலத்தில், எமது நாட்டுக்கு சர்வதேச ரீதியில் களங்கம் ஏற்படுத்துவதற்காக ஆயுத போராட்ட அமைப்புக்களால் போலியான தகவல்கள் வழங்கப்பட்டன. அதன்பின்னர் […]

இலங்கை

கொழும்பில் வெடிகுண்டு தாக்குதல் சர்ச்சை: சஜித் முன்வைத்துள்ள கோரிக்கை!

  • October 6, 2023
  • 0 Comments

கொழும்பில் விரைவில் வெடிகுண்டுத் தாக்குதல்கள் இடம்பெறும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில்,   எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவ்வாறான அழிவுகள் ஏற்படாதவாறு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார். பாராளுமன்றம் இன்று (06.10) கூடிய நினைலயில், வாய்மொழி மூலக் கேள்வி நேரத்தின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கருத்து வெளியிட்ட அவர், பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பொது பாதுகாப்புத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்து, சபையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,” என […]

ஐரோப்பா

இத்தாலியில் குவிந்த மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர்

  • October 6, 2023
  • 0 Comments

இத்தாலிக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர சென்றடைந்துள்ளது. 2013 ஆம் ஆண்டு முதல் இந்த புலம்பெயர்தோர் வந்தடைந்துள்ளனர். அதே நேரத்தில் நாட்டிற்கு வரும் மக்களின் இறப்பு விகிதம் 28,000 ஐத் தாண்டியுள்ளது. இத்தாலியில் குடியேறியவர்களின் எண்ணிக்கை 2010ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் தொடங்கியது, குறிப்பாக 2013 இல், லிபியாவிலிருந்து புறப்பட்ட 368 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தனர். Save the Children என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், மத்தியதரைக் கடலில் குடியேறிய 28,000க்கும் அதிகமானோர் இத்தாலியை அடையும் முயற்சியில் இறந்துள்ளதாகவும், இதில் […]

இலங்கை

நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு!

  • October 6, 2023
  • 0 Comments

நாடாளுமன்றம் இன்று (06.10) காலை ஆரம்பமாகிய நிலையில், சபையில் ஏற்பட்ட கடும் அமளி காரணமாக 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. 2022 இல் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு செலுத்தப்பட்ட சதவீதங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்வியின் காரணமாக இந்த சூடான நிலைமை ஏற்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க இதுதொடர்பான விடயத்தை குறிப்பிட்டிருந்த நிலையில், ஆளுங்கட்சியினர் அதற்கு மீண்டும் ஒருமுறை கால அவகாசம் கோரியதையடுத்து இந்த சூடான நிலைமை ஏற்பட்டது.