ஐரோப்பா

பிரான்ஸில் தீவிரமடையும் கொரோனா தொற்று – முன்கூட்டியே எடுக்கப்பட்ட நடவடிக்கை

  • October 6, 2023
  • 0 Comments

பிரான்ஸில் அடுத்தகட்டக் கொரோனாத் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட திகதியை விட முன்னதாகவே இதன் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட உள்ளது. முதலில் இந்தத் தடுப்பூசி திட்டம் 15ம் திகதி ஒக்டோபர் மாதம் முதல் ஆரம்பிக்கும் என சுகாதார அமைச்சினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனாத் தொற்று மிகவேகமாகப் பரவுவதால், முதலே கொரோனத் தடுப்பூசடூகள் போட்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், தொடர்சியான கடும் நோய் உள்ளவர்கள், உடல் பருமனானவர்கள், கர்ப்பிணிப பெண்கள் போன்றோரே முதற்கட்டத் தொகுதித் தடுப்பூசிகள் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் பாடசாலை அதிபரின் மோசமான செயல் – பல்லாயிரம் யூரோக்கள் மாயம்

  • October 6, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் பாடசாலை அதிபரின் மோசமான செயல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் பாடசாலை அதிபர் ஒருவர் பாடசாலையின் வங்கி கணக்கில் இருந்து பெரும் தொகையான பணத்தை மோசடி செய்துள்ளார். ஃபெலன்ஸ்போர்க் என்ற பிரதேசத்தில் ஓர் பாடசாலையில் மையாற்றுகின்ற அதிபர் பாடசாலைக்குரிய வங்கி கணக்கில் இருந்து 44454 யுரோக்களை களவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது இந்த பாடசாலை வங்கி கணக்கை சொந்த கணக்காக பாவித்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த அதிபருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் கொடுக்கல் வாங்கல் […]

ஆசியா

சிரிய இராணுவ அகாடமியை குறிவைத்து தாக்குதல் : 100 பேர் பலி!

  • October 6, 2023
  • 0 Comments

சிரிய இராணுவ அகாடமியில் நேற்று (05.10) நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோம்ஸில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. “ஆயுதமேந்திய பயங்கரவாத அமைப்புகள்” “இராணுவ அகாடமியின் அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழாவை” குறிவைத்ததாக அந்நாட்டின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு, “100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் பாதிப்பேர் இராணுவத்தினர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.  குறைந்தது 125 பேர் காயமடைந்ததாக அது கூறியது. சம்பவம் […]

இலங்கை

இலங்கையில் பணவீக்கம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்

  • October 6, 2023
  • 0 Comments

இலங்கையில் எதிர்காலத்தில் நாட்டின் பணவீக்கத்தை 5% ஆக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியும் அரசாங்கமும் இணக்கம் கண்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் புதிய சட்டத்தின் பிரகாரம் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகம்

X ஐக் கொள்வனவு செய்தமை குறித்து விசாரணையை எதிர்கொள்ளும் மஸ்க்!

  • October 6, 2023
  • 0 Comments

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை $44 பில்லியனுக்கு கையகப்படுத்தியது தொடர்பாக விசாரணைகளை எதிர்கொள்கிறார். அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் இது குறித்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த வியாழன் அன்று மஸ்கை சாட்டிசியமளிக்க முன்னிலையாக வேண்டும் என ஏஜென்சி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. எஸ்இசிக்கும் மஸ்க்கிற்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் பகையை இது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், எலான்ஸ மஸ்க் விசாரணையில் முன்னிலையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இலங்கை செய்தி

இனி நாட்டில் தமிழர்களுக்கு எந்த நீதியும் கிடைக்கப் போவதில்லை – அருட்தந்தை சத்திவேல்

  • October 5, 2023
  • 0 Comments

ஜனாதிபதி சர்வதேச விசாரணை இல்லை என்பதன் மூலம் தமிழர்களுக்கும் உயிர்ப்பு தின குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் காட்டிய முகம் மிக கொடூரமானது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அண்மையில் ஜேர்மன் நாட்டு ஊடகவியலாளர் ஒருவர் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை பேட்டி கண்டபோது ஜனாதிபதி அவர்கள் […]

செய்தி வட அமெரிக்கா

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்!! அமெரிக்க நபருக்கு 690 ஆண்டுகள் சிறை?

  • October 5, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் ஒரு இளைஞனுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படவுள்ளது. கலிபோர்னியாவைச் சேர்ந்த 34 வயதான மேத்யூ ஜாக்ஸெவ்ஸ்கி 690 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார். பகல்நேர பராமரிப்பு மையத்தில் 16 சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். மேலும் அவர் 16 சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஒரு சிறுவனுக்கு ஆபாச வீடியோக்களை காட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. தெற்கு கலிபோர்னியாவில் மேத்யூ ஜாக்ர்ஸெவ்ஸ்கி என்ற நபர் பராமரிப்பு மையத்தில் பணிபுரிந்தார். பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் காப்பதற்காக […]

உலகம் செய்தி

தாய்லாந்தில் காணப்படும் அபூர்வ புல் போன்ற பாம்பு

  • October 5, 2023
  • 0 Comments

இவ்வளவு தனித்தன்மை வாய்ந்த பாம்பை பார்த்திருக்கிறீர்களா? இந்த பூமியில் பல நூற்றாண்டுகளாக பல விலங்குகள் ஒன்றாக வாழ்கின்றன. சில விலங்குகள் நமக்குத் தெரியும், சில இன்னும் நமக்கு மர்மமாகவே இருக்கின்றன. சமீபத்தில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருப்பினும், இந்த வீடியோ ஒரு வருடத்திற்கு முன்பே வைரலானது. புல் போன்ற பாம்பு ஒன்று இருப்பதை இந்த வீடியோவில் காணலாம். இப்படிப்பட்ட பாம்பை இதுவரை யாரும் பார்த்ததில்லை. தகவலின்படி, இந்த பாம்பு தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது (தாய்லாந்தில் […]

இலங்கை செய்தி

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி மாயம்

  • October 5, 2023
  • 0 Comments

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட இறுதியாண்டு மாணவியை காணவில்லை என மாணவியின் பெற்றோரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அநுராதபுரம் பகுதியை சேர்ந்த மாணவியே காணாமல் போயுள்ளார். மாணவி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியில் தங்கியிருந்து தனது கற்றல் நடவடிக்கையை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம்(3) முதல் அவரது தொலைபேசி இயங்காத நிலையில், அவரை தேடி அநுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பெற்றோர் சென்றுள்ளனர். விடுதியில் பெற்றோர் விசாரித்த […]

இலங்கை செய்தி

மலேசியாவில் கொல்லப்பட்ட இலங்கையர்கள்!! பொலிஸார் வெளியிட்ட தகவல்

  • October 5, 2023
  • 0 Comments

அண்மையில் மலேசியாவின் செந்தூலில் மூன்று இலங்கைப் பிரஜைகள் படுகொலை செய்யப்பட்டதற்கு பணம் தொடர்பான பிரச்சினைகளே காரணம் என மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் அல்லாவுதீன் அப்துல் மஜித், வழக்குத் தீர்க்கப்பட்டதை உறுதிப்படுத்தியதுடன், நான்கு சந்தேக நபர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டைப் பதிவு செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையில், இரண்டு பிரதான சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக சந்தேகத்தின் பேரில் மூன்று இலங்கையர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் – […]