இலங்கை முக்கிய செய்திகள்

கொள்ளுப்பிட்டியில் பேரூந்து ஒன்றின் மீது விழுந்த மரம் – 5 பேர் மரணம்

  • October 6, 2023
  • 0 Comments

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சந்திக்கு அருகில் பேரூந்து ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் டூப்ளிகேஷன் வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து மத்துகம நோக்கி பயணித்த பேரூந்து மீது கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சந்திக்கு அருகில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இவர்கள் […]

இலங்கை

கொழும்பில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து -22 பேர் காயம்!

  • October 6, 2023
  • 0 Comments

கொழும்பு பிரதான வீதியின் கஜுகம பிரதேசத்தில் பேருந்து ஒன்றும், கொள்கலன் ரயில் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இன்று (06.10) விபத்துக்குள்ளாகியது. அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தும் கொழும்பில் இருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலும் மோதியே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்நிலையில், பேருந்துக்கு பின்னால் பயணித்த கொள்கலன் வாகனம் ஒன்றும் பேருந்துடன் மோதி பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 22 பேர் காயமடைந்ததாகவும், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், […]

அறிவியல் & தொழில்நுட்பம்

YouTube தளத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் – வீடியோவை நீக்க முடியாமல் திணறும் நிர்வாகம்

  • October 6, 2023
  • 0 Comments

தற்போது உலகிலேயே மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் எதுவென்றால் அது யூடியூப்தான். இது உலகிலேயே மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுளுக்கு சொந்தமானது. இதுவரை யூட்யூபில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டதாக எவ்வித செய்திகளும் வெளிவந்தது இல்லை. ஆனால் முதல்முறையாக இந்த தளத்தில் ஆபாச காணொளிகள் பதிவேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறான காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டால் அதை யூடியூப் தரப்பிலிருந்து உடனடியாக நீக்கிவிடுவார்கள். ஆனால் இந்த ஆபாச காணொளிகள் பதிவேற்றம் செய்த கணக்குகளை நீக்கிய பிறகும் […]

இலங்கை

இலங்கையில் தினமும் 50 பேரின் உயிரை பறிக்கும் மதுபானம்

  • October 6, 2023
  • 0 Comments

இலங்கையில் தினமும் 50 பேர் மது அருந்துவதால் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது. மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் இதனை தெரிவித்துள்ளது. அத்தோடு, உலகளாவிய ரீதியில் ஒவ்வோர் ஆண்டும் 3 மில்லியன் உயிரிழப்புகள் பதிவாகுவதுதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல நோய்கள் மற்றும் விபத்துகள் ஏற்படுவதற்கும் மது அருந்துவதே முக்கிய காரணம் என்றும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கை

கொள்ளுப்பிட்டி பகுதியில் பயணிகள் பேருந்து மீது முறிந்த விழுந்த மரம் : பலர் காயம்!

  • October 6, 2023
  • 0 Comments

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பயணிகள் பேருந்தின் மீது மரம் ஒன்று இன்று (06.10) காலை மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இதனால் குறித்த பயணிகள் பேருந்து குடை சாய்ந்ததுடன், பேருந்தில் இருந்தவர்கள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர். லிபர்ட்டி சுற்றுவட்டத்தில் இருந்து பம்பலப்பிட்டி நோக்கி சுமார் 100 மீற்றர் தொலைவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.  விபத்து காரணமாக வீதி தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அறிந்திருக்க வேண்டியவை

பூமியை விட்டு விலகிச் செல்லும் நிலா – காத்திருக்கும் ஆபத்து

  • October 6, 2023
  • 0 Comments

பூமியின் சுழற்சியில் நிலவின் பங்கு முக்கியமானது. ஆனால் ஆண்டுதோறும் சராசரியாக 3.78 சென்டிமீட்டர் அளவுக்கு நிலவானது பூமியை விட்டு விலகிச் செல்கிறது. இதனால் எதிர்காலத்தில் பூமிக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, போன்ற நாடுகள் பல ஆண்டுகளுக்கு முன்பே நிலவுக்கு விண்கலங்களை அனுப்பி சோதனை செய்துள்ளது. இத்தகைய பயணங்களின்போது நிலவின் மேற்பரப்பில் ‘ரெட்ரோ ரிஃப்ளெக்டர்’ எனப்படும் ஒரு வகை கண்ணாடியை நிலவில் அவர்கள் பதித்தனர். அதை வைத்துதான் பூமிக்கும் நிலவுக்கும் இடையான தூரம் […]

ஐரோப்பா

ஆட்கடத்தல் கும்பலை கட்டுப்படுத்த ஒப்பந்தம் கைச்சாத்து! : 03 ஐரோப்பிய நாடுகள் இணக்கம்!

  • October 6, 2023
  • 0 Comments

ஆட்கடத்தல் கும்பல்களுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஐரோப்பிய தலைவர்களை சந்தித்து குடியேற்றம் குறித்து ஆய்வு செய்ததுடன், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். முன்னதாக, செர்பியா, பெல்ஜியம் மற்றும் பல்கேரியாவுடன் குற்றக் கும்பலை எதிர்த்துப் போராட உதவும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக அவர் கூறினார். அத்துடன் பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களை சந்தித்ததாகவும் அவர் கூறினார். இது ஐரோப்பிய நாடுகள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினை என விவரித்த […]

ஆசியா

சிங்கப்பூரில் திருமண விருந்தில் உட்கொண்ட 30 பேருக்கு ஏற்பட்ட நிலை

  • October 6, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் திருமண விருந்தில் உட்கொண்ட 30 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 3ஆம் திகதியன்று செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலில் அந்த திருமண மதிய உணவு நடந்துள்ளது. இருப்பினும், விருந்தில் கலந்து கொண்டு இதில் பாதிக்கப்பட்ட எவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று அது கூறியது. இதில் மணமகளும் பாதிக்கப்பட்டு இருப்பதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் புரிந்து கொள்கிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து சுகாதார அமைச்சுடன் தற்போது விசாரணை நடத்தி வருவதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு […]

இலங்கை

இலங்கையின் பெரும்பாலான இடங்களில் இன்றும் மழையுடன் கூடிய வானிலை!

  • October 6, 2023
  • 0 Comments

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (06.10) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளில் 50 மி.மீக்கு மேல் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள், பொலன்னறுவை, மாத்தளை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் […]

உலகம்

காலநிலை மாற்றம் காரணமாக மில்லியன் கணக்கான குழந்தைகள் இடப்பெயர்வு!

  • October 6, 2023
  • 0 Comments

காலநிலை மாற்றம் காரணமாக கடந்த 2016 முதல் 2021 ஆம் ஆண்டுவரை ஏறக்குறைய 43.1 மில்லியன் குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளது. ஆனால் அவ்வாறாக இடம்பெயர்ந்தவர்கள் மீது கவனம் செலுத்தப்படவில்லை என்றும் குறைக்கூறியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள விரிவான  அறிக்கையில், ஐக்கிய நாடுகளின் நிறுவனம் பாதிக்கப்பட்ட சில குழந்தைகளின் இதயத்தை உலுக்கும் கதைகளை விவரித்துள்ளது. காலநிலை பேரழிவுகளால் ஏற்படும் உள் இடப்பெயர்வுகள் பற்றிய புள்ளிவிவரங்கள் பொதுவாக பாதிக்கப்பட்டவர்களின் வயதைக் கணக்கிடுவதில்லை என்றும் அந்த அறிக்கையில் […]