தமிழ்நாடு

தர்ம்புரியில் பீர் பாட்டிலில் மிதந்த பல்லி; குடிமகன்கள் அதிர்ச்சி!!

  • January 14, 2024
  • 0 Comments

பென்னாகரம் அடுத்து பாப்பாரப்பட்டி அரசு மதுபான கடையில் பீர் பாட்டிலில் பல்லி இருந்ததால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்து, கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு மதுபான கடையில் இன்று மூன்று நண்பர்கள் 12 கிங்பிஷர் பீர் பாட்டில்களை வாங்கியுள்ளனர். இதனை எடுத்துச் சென்ற அவர்கள், பீர் பாட்டில்களை வாகனத்தில் வைக்கும் போது அதில் ஓரு பீர் பாட்டிலில் மட்டும் அளவு கம்மியாக இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பீர் […]

இலங்கை

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை வௌியிட்ட ஆசிரியருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான I மற்றும் II வினாத்தாள்கள் வௌியானது தொடர்பில் அம்பாறையில் உள்ள பிரபல அரச பாடசாலையின் உயர்தர விவசாய விஞ்ஞான ஆசிரியரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது. 52 வயதுடைய சந்தேகத்திற்குரிய ஆசிரியர் உயர்தர மாணவர்களுக்கான வகுப்புகளையும் நடத்தி வந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட ஆசிரியர் விவசாய விஞ்ஞானம் I வினாத்தாள் கேள்விகளை ஜனவரி 8 ஆம் திகதியும், விவசாய விஞ்ஞானம் II […]

ஐரோப்பா

டென்மார்கின் மகாராணி மார்கரிட்டா இன்று ஓய்வு பெற்றார்!

  • January 14, 2024
  • 0 Comments

52 வருடங்களாக டென்மார்க்கை ஆட்சி செய்த இரண்டாம் மார்கரிட்டா மகாராணி இன்று (14) ஓய்வு பெற்றார். இன்று அவரது ஓய்வு மற்றும் அவரது மூத்த மகன் இளவரசர் ஃபிரடெரிக் நாட்டின் புதிய மன்னராக அரியணை ஏறுவதையும் குறிக்கிறது. இந்த அற்புதமான வரலாற்று நிகழ்வை காண தற்போது கோபன்ஹேகனில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்கு அருகில் நாட்டு மக்கள் கூடியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராணி தனது 2024 புத்தாண்டு உரையின் போது தனது ராஜினாமாவை அறிவித்தார். 1972 […]

ஐரோப்பா

தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தில் அமைதி சூத்திரத்தை முன்வைத்த உக்ரைன்

டாவோஸில் நடந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தில் உக்ரைன் அமைதி சூத்திரத்தை முன்வைத்துள்ளது. வாரத்தின் பிற்பகுதியில் டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உரையாற்றத் திட்டமிடப்பட்டுள்ள்ளார். உக்ரைன் ஜனாதிபதி ஒரு 10-புள்ளி சமாதான சூத்திரத்தை முன்வைத்தார் என தெரிவிக்கப்பட்டுளள்து.

ஐரோப்பா

ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுக்க ஹமாஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்!

  • January 14, 2024
  • 0 Comments

மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுப்பதற்கு ஹமாஸ் செயல்பட்டு வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Mossad, (இஸ்ரேல் பாதுகாப்பு நிறுவனம்)  மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் (IDF) கூறுகையில், ஹமாஸ் “உலகம் முழுவதும் உள்ள அப்பாவிகளை தாக்குவதற்காக வெளிநாடுகளில் தனது வன்முறை நடவடிக்கையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்தது” என்பதை நிரூபிக்கும் “கணிசமான” தகவல்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. லெபனானில் உள்ள ஹமாஸ் தளபதிகளிடமிருந்து தாக்குதல்களுக்கான இலக்குகள், அதனை முன்னெடுப்பவர்கள் குறித்த பல்வேறு தகவல்கள் […]

இலங்கை

மயிலத்தமடு பசுக்களுக்கும் காளைகளுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து யாழில் போராட்டத்திற்கு அழைப்பு!

  • January 14, 2024
  • 0 Comments

தமிழர்களின் பட்டிப் பொங்கலன்று மட்டு மயிலத்தமடு பசுக்களுக்கும் காளைகளுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் சார்பில் தென்கயிலை ஆதீன தவத்திரு அகத்தியர் அடிகளார் விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்தி குறிப்பில்,மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல்தரையில் அத்துமீறி குடியேறவும் பயிர்செய்யவும் முனையும் ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ச்சியாக அங்கு மேய்ச்சலில் ஈடுபடும் பசுக்களுக்கும் காளைகளுக்கும் சொல்லொணாத் துயரங்களை ஏற்படுத்தி வருகின்றனர் வெங்காய […]

இலங்கை

வவுனியாவிலும் களைகட்டிய தைப்பொங்கல் கொண்டாட்டங்கள்!

  • January 14, 2024
  • 0 Comments

உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது. நாளையதினம் உழவர் தினமான தை முதலாம் திகதி பிறக்கவுள்ள நிலையில் தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற வாக்கிற்கிணங்க தைப்பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாடவுள்ளனர். வவுனியா நகரப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதுடன் பொங்கலுக்கு தேவையான பானை , அகப்பை, கரும்பு, பட்டாசு, பழவகை என்பவற்றின் விற்பனை சூடு பிடித்துள்ளது. தைப்பொங்கல் திருநாள் நாளையதினம் (15.01.2024) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள […]

ஐரோப்பா

ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற ஐந்து புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு

கால்வாயை கடக்க முயன்ற ஐந்து புலம்பெயர்ந்தோர் பிரெஞ்சு கடற்பகுதியில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சுமார் 70 பேர் ஒரு சிறிய படகில் ஏற முற்பட்டபோது அது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்று பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்த நால்வரும் ஈராக் மற்றும் சிரியாவை சேர்ந்தவர்கள் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 32 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் மேலும் ஒருவர் பலத்த காயமடைந்து அருகிலுள்ள உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். வெளிவிவகார அமைச்சர் டேவிட் கேமரூன், இது “இதயத்தை உடைக்கிறது” […]

பொழுதுபோக்கு

கமல் – மாயா பற்றி மோசமான பேச்சு.. கண்கலங்கி மன்னிப்பு கேட்ட விஜய் பிரபலங்கள்…

  • January 14, 2024
  • 0 Comments

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை மாயா மற்றும் கமல்ஹாசன் குறித்தும் விஜய் டிவி பிரபலங்கள் புகழ் மற்றும் குரேஷி பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இருவரும் தனித்தனியாக வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி அனைவருக்கும் மிகவும் பிடித்தமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். அந்த அக்டோபர் மாதம் 1ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி இன்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மாலை 6 மணியளவில் கொண்டாட்டங்களுடன் தொடங்கும் பிக் […]

இந்தியா

மணிப்பூரில் தொடங்கிய ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை ..!

இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின் இரண்டாம் கட்டத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரில் தொடங்கினார். இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் நடைபெறும் இந்த யாத்திரை மணிப்பூரின் தவுபல் மாவட்டத்தில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மணிப்பூரில் இருந்து மும்பை வரை நடைபயணம் மேற்கொள்கிறார். 15 மாநிலங்களில் 6,713 கி.மீ. தூரம் நடைபெறும் இந்த யாத்திரை 67 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ராகுல் காந்தியுடன் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொள்கிறார்கள். […]