இலங்கை

கிளிநொச்சியில் நீர்ப்பாசன கால்வாயிலிருந்து இளைஞர்கள் இருவர் சடலங்களாக மீட்பு!

  • January 14, 2024
  • 0 Comments

கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் உள்ள நீர்பாசன கால்வாயிலிருந்து இளைஞர்கள் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.நேற்று இரவு இடம்பெற்ற விபத்தினால் அவர்கள் இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதி குறியீடுகளை உடைத்து நீர்பாசன வாய்க்காலிற்குள் பாய்ந்து விபத்திற்குள்ளாகியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் கிளிநொச்சி கல்மடு பகுதியை சேர்ந்த 20 வயதுடைய தயாளன் தனுசன் மற்றும் அழகாபுரி பகுதியை சேர்ந்த 18 வயதுடைய கிருஸ்ணன் சதீசன் ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். […]

இலங்கை

பொலிஸாரின் நீதி நடவடிக்கையின் கீழ் 700இற்கும் மேற்பட்டோர் கைது!

  • January 14, 2024
  • 0 Comments

கடந்த 24 மணித்தியாலங்களில் ‘நீதி நடவடிக்கை’யுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 771 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது192 கிராம் ஹெரோயின், 101 கிராம் ஐஸ் மற்றும் 10,611 மாத்திரைகளும் அங்கு காணப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசியா

மலேசியாவில் தன் 112ஆவது வயதில் 8வது திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடும் மூதாட்டி!

  • January 14, 2024
  • 0 Comments

112 வயதான சிட்டி ஹவா என்ற மூதாட்டி, தன்னுடைய 8 வது திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மலேசியாவின் தும்பட் (Tumpat) பகுதியில் வசித்து வருபவர் சிட்டி ஹவா (Siti Hawa) என்ற 112 வயது மூதாட்டி. சிட்டி ஹவா இதற்கு முன்னதாக 7 முறை திருமணம் செய்து கொண்டுள்ளார், அதில் சில கணவர்கள் உயிரிழந்து விட்டனர். மற்ற கணவர்கள் விவாகரத்து பெற்றுக் கொண்டுவிட்டனர். தற்போது 58 வயதாகும் அவரது இளைய மகனுடன் சிட்டி ஹவா […]

இலங்கை

கிழக்கு மாகாணத்தின் சேவைகளை பாராட்டிய IMF குழுவினர்!

  • January 14, 2024
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவினர் திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டனர். கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடியதுடன், கிழக்கு மாகாணம் குறுகிய காலத்தில் அடைந்து வரும் வளர்ச்சிக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தனர். இக்கலந்துரையாடலில் பீட்டர் ப்ரூயர் (சிரேஸ்ட பணித் தலைவர்), சர்வத் ஜஹான் (IMF வதிவிடப் பிரதிநிதி), சோபியா ஜாங் (சிரேஸ்ட பொருளாதார நிபுணர்), ஹுய் மியாவ் (சிரேஸ்ட நிதித்துறை […]

உலகம்

சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த திட்டமிடும் கனடா!

  • January 14, 2024
  • 0 Comments

கனடாவில் வசிக்க அனுமதிக்கப்படும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கனடா பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர், வெளியிட்டுள்ள தகவலின்படி, கனடா வீட்டு வசதி நெருக்கடிக்கான விமர்சனங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா தனது பொருளாதாரத்தை இயக்குவதற்கும், வயதான மக்களை ஆதரிப்பதற்கும் குடியேற்றத்தை சார்ந்துள்ளது மற்றும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆண்டுதோறும் குடியேற்றத்தை அதிகரித்து வருகிறார். பணவீக்கம் கட்டுமானத்தை மெதுவாக்கியது போலவே, குடியேற்றவாசிகள் மற்றும் சர்வதேச மாணவர்களின் அதிகரிப்பு வீடுகளுக்கான தேவையை தூண்டுவதாகவும் தெரிவித்துள்ளது. […]

இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 12 பேர் கைது!

  • January 14, 2024
  • 0 Comments

நாட்டின் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காரைநகர் கோவிலான் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் வடக்கடலில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது 03 மீன்பிடி படகுகளில் இருந்த இந்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் படகுகள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மிலாடி மீன்பிடி பரிசோதகரிடம் […]

ஆசியா

ஆப்கன் – பாகிஸ்தான் இடையே முற்றும் மோதலால் மூடப்பட்ட எல்லை…

  • January 14, 2024
  • 0 Comments

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே முற்றும் மோதல் காரணமாக இருநாட்டு எல்லையின் முக்கிய வாயில் மூடப்பட்டுள்ளது. இது இருநாட்டினர் இடையிலான இறுக்கம் என்பதற்கு அப்பால், ஆப்கனிலிருந்து இந்தியாவுக்கான இறக்குமதியை பாதிக்குமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. பாகிஸ்தானில் தங்கியிருக்கும் சுமார் 17 லட்சம் ஆப்கன் அகதிகளை, ஆப்கானிஸ்தானுக்கு கட்டாயமாக அனுப்பும் பணிகளை பாகிஸ்தான் அரசு அண்மையில் தொடங்கியது. முன்னதாக பல தசாப்தங்களாக தொடர்ந்த உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கானோர் ஆப்கனில் இருந்து வெளியேறி அண்டை தேசமான பாகிஸ்தானில் […]

பொழுதுபோக்கு

“நான் மட்டும் இல்ல.. என் கணவரும் கர்ப்பமா இருக்காரு..” என்னவா இருக்கும்?

  • January 14, 2024
  • 0 Comments

பிரபல நடிகை அமலா பால் இப்பொது வெளியிட்டுள்ள ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் தனது கணவரும் இப்பொது கர்பமாக இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த 2010ம் ஆண்டு ‘வீரசேகரன்’ என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் அமலா பால். ஆனால் அறிமுகமான துவக்கத்திலேயே சர்ச்சை நாயகியாக மாற்றியது ‘சிந்து சமவெளி’ திரைப்படம் மூலம் தான். இப்படத்தில் நடித்ததற்காக அமலா பாலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அதே நேரம் நெகடிவ் விமர்சனங்களால் மிகவும் பிரபலமடைந்தார் […]

பொழுதுபோக்கு

ஆமிர் கான் மகளின் திருமண வரவேற்பில் மாஸ் என்ட்ரி கொடுத்த நடிகர் சூர்யா

  • January 14, 2024
  • 0 Comments

பிரபல நடிகர் அமிர் கானுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே பெரும் வரவேற்பு உண்டு. 58 வயது நிரம்பிய அமிர் கானுக்கு ஈரா கான் என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி 3ம் தேதி மும்பையில் அவருக்கு திருமணம் நடந்து முடிந்தது. ஜனவரி 3 ஆம் தேதி மும்பையில் ஈரா கான் மற்றும் நூபுர் ஷிகாரே ஆகிய இருவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் தங்கள் திருமணத்தை பதிவு செய்து கொண்டனர். ஈரா […]

முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

எங்களிடமிருந்து ஆதரவு இல்லை – சீனாவுக்கு எதிரான தைவானிடம் கூறிய அமெரிக்கா

  • January 14, 2024
  • 0 Comments

தைவானின் சுதந்திரத்தை ஆதரிக்கவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. தைவானில் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு தெரிவித்துள்ளார். சீனாவின் அழுத்தம் மற்றும் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தைவான் ஜனாதிபதி தேர்தலும் பொதுத் தேர்தலும் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகி ஜனாதிபதி தேர்தலில் அந்நாட்டின் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சியின் வேட்பாளர் வில்லியம் லாய் வெற்றி பெற்றார். அவர் சீனாவின் […]