அறிந்திருக்க வேண்டியவை

பூமிக்கு இந்த ஆண்டு காத்திருக்கும் நெருக்கடி – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • January 14, 2024
  • 0 Comments

பூமி இவ்வாண்டு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வெப்பத்தைச் சந்திக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாட்டு நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. El Nino வானிலை மாற்றம் ஏற்படுத்தக்கூடிய கடுமையான பாதிப்பைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கும்படி உலக நாடுகளை அது கேட்டுக்கொண்டது. குளிர்தரும் La Nina-வில் இருந்து வெப்பம்தரும் El Nino-வுக்குக் கடந்தாண்டு வானிலை மாறியது பூமி இவ்வாண்டு மேலும் அதிகமான வெப்பநிலையை அடைவதற்கான அறிகுறி என்று ஐக்கிய நாட்டு நிறுவன வானிலை அலுவலகச் செயலாளர் […]

இலங்கை

இலங்கையில் பால் மா விலையும் உயர்வு!

  • January 14, 2024
  • 0 Comments

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ கிராம் பால் மா பொதியின் விலை 75 ரூபாவினால் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பா

தனிமையாக உணர்பவர்களுக்காக நெதர்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட கருவி

  • January 14, 2024
  • 0 Comments

நெதர்லாந்தில் தனிமையாக உணர்பவர்களுக்காகவும் உலகின் வேறொரு பகுதியில் உள்ள ஒருவருடன் பேச விரும்புபவர்களுக்காகவும் விலைமதிப்பற்ற கருவிக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஹோலோபாக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இது நெதர்லாந்தில் உள்ள Holoconnects என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது, மேலும் இது மேம்பட்ட மென்பொருள் மற்றும் வன்பொருளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், 86 இன்ச் மல்டிவியூ திரை மற்றும் இதற்கான இணைய வசதிகள் வழங்கப்படுவதற்கு இடையில், 3D ஹாலோகிராம்களை உலகில் எங்கும் முன்வைத்து, உயர்தர காட்சிகளை உருவாக்க முடியும் என்று அவர்கள் […]

செய்தி

ஜெர்மனிக்கு புதிதாக வருவோருக்கு இடமளிக்க முடியாத நிலை – கடும் நெருக்கடியில் அரசாங்கம்

  • January 14, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் புலம்பெயர்தல் இன்று பெரிய அரசியல் பிரச்சினையாகியுள்ள நிலையில் புதிதாக வருவோருக்கு இடமளிப்பது கடினமான விடயமாகிவிட்டதென செய்தி வெளியாகியுள்ளது. ஜெர்மனி சான்ஸலரும், 16 மாகாண ஆளுநர்களும் கூடி, அதிக அளவிலான புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவர முடிவு செய்துள்ளதுனர். 2023 ஆம் ஆண்டில் 350,000 க்கும் அதிகமானோர் ஜேர்மனியில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர். SPD கட்சியின் கருத்துப்படி, அரசாங்கம் அதன் தற்போதைய கொள்கைகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. […]

உலகம்

உலகெங்கிலும் எடையைக் கட்டுப்படுத்த தரமற்ற மருந்துகளைப் பயன்படுத்தும் இளைஞர்கள்

  • January 14, 2024
  • 0 Comments

உலகம் முழுவதும் பதின்ம வயதினரில் 10 பேரில் ஒருவர் எடையைக் கட்டுப்படுத்த தரமற்ற மருந்துகளைப் பயன்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. எடையைக் கட்டுப்படுத்த அங்கீகரிக்கப்படாத சிறுநீரிறக்கி, மலமிளக்கி, டயட் மாத்திரைகள் போன்ற தரமற்ற மருந்துகளை இளைஞர் சமுதாயம் நாடுவதாகக் கூறப்படுகிறது. கணக்கெடுப்புக்கு பதிலளித்த உலகெங்கிலும் உள்ள சுமார் 600,000 இளைஞர்களில், அவர்கள் உடல் பருமன் காரணமாக தரமற்ற தயாரிப்புகளை நாடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தரமற்ற மருந்துகளை பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் 4 மடங்கு அதிகரிக்கும் என அமெரிக்க மருத்துவ […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் திருடப்பட்ட கார்களுடன் பொலிஸாரின் சிக்கிய கும்பல்

  • January 14, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் திருடப்பட்ட இரண்டு கார்களுடன் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்தனர். எண்டெவர் ஹில் பகுதியில் இரண்டு கார்களை பொலிஸார் கண்காணித்து பின்தொடர்ந்தனர். இரண்டு கார்களும் பல சாலைகளில் அதிவேகமாக இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கார்களை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அங்கிருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் நால்வர் பதினெட்டு வயதுக்குட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். நகரில் கார் திருட்டு மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அறிவியல் & தொழில்நுட்பம்

புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ள WhatsApp!

  • January 14, 2024
  • 0 Comments

WhatsApp ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. அந்தவகையில் பயனர்களின் வசதிக்கேற்ப பல புதிய வசதிகளை அறிமுகம் செய்துகொண்டே வருகின்றது. அந்தவகையில் தற்பொழுது Synchronized எனப்படும் Audio, Video அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய வசதியொன்றை அறிமுகம் செய்யவுள்ளது. அதாவது, நீங்கள் Video Callஇல் இருக்கும்பொழுதே மற்றவருடன் Audio Music , Video உள்ளிட்டவைகளைப் பகிர்ந்து Synchronized அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். Video Callஇல் இருக்கும்பொழுதே ஒரு நபர் Screen Share செய்தால் அவர் Audio ஏதேனும் Playசெய்தால் அதை […]

செய்தி

இலங்கையில் இருந்து வெளிநாடு சென்ற பெண் – தாய்க்கு நேர்ந்த கதி

  • January 14, 2024
  • 0 Comments

இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு வேலைபெற்றுச் சென்ற தனது மகளின் நிலை குறித்து விசாரிக்க சென்ற தாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு முகவர் நிலைய ஊழியர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். குருணாகல் பிரதேசத்தில் உள்ள வெளிநாட்டு முகவர் நிலையமொன்றின் மூலம் குவைத் நாட்டுக்கு சென்ற மகளை பற்றி விசாரிக்கச் சென்ற தாயை அந்நிறுவன ஊழியர்கள் தாக்கியுள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட தாய் இது தொடர்பில் குருணாகல் பொலிஸாருக்கு முறைப்பாடு அளித்துள்ளார். இதனையடுத்து குருணாகல் பொலிஸார் இது […]

விளையாட்டு

டி20-யில் மீண்டும் களமிறங்கும் கோலி!

  • January 14, 2024
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டாவது போட்டி இன்று இந்தூரில் அமைந்துள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி வந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விராட் கோலி பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளார். கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் தான் விளையாடினர். அதனை தொடர்ந்து நீண்ட மாதங்களுக்கு பிறகு […]

ஐரோப்பா

பிரான்ஸில் முன்னாள் காதலியின் காதலனால் நபருக்கு நேர்ந்த கதி

  • January 14, 2024
  • 0 Comments

பிரான்ஸில்உயிருக்கு ஆபத்தான நிலையில் நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 9 தடவைகள் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் குறித்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாரிஸின் தென்கிழக்கு புறநகரில் இச்சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் மிக கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். ஒன்பது வெட்டுக்காயங்கள் அவரது உடலில் இருந்ததாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தாக்குதலுக்கு இலக்கான நபரின் முன்னாள் காதலியின் தற்போதைய காதலனே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது. தாக்குதல் மேற்கொண்டவர் […]