இந்தியா

பிரதமர் மோடியின் வருகை : காஷ்மீரில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி எதிர்வரும் செவ்வாய்கிழமை 20 ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பின், பிரதமர் மோடி காஷ்மீருக்கு செல்வது இது இரண்டாவது முறையாகும். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடியின் காஷ்மீர் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. அங்கு எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும், பிரதமரின் […]

இலங்கை

இலங்கையில் பேருந்தில் ஏறிய பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்தக் கதி!

  • February 18, 2024
  • 0 Comments

சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை நடத்த பேருந்தில் ஏறிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வெலிமடை பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய தனியார் பாதுகாப்பு அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நாடு தழுவிய நீதி நடவடிக்கையுடன் இணைந்து பொது போக்குவரத்து சேவைகளில் பயணிக்கும் பெண்கள் […]

ஐரோப்பா

ட்ரம்பைப் பற்றி சிணுங்குவதை நிறுத்துங்கள்: டச்சு பிரதமர் ஐரோப்பியர்களிடம் வலியுறுத்தல்

டொனால்ட் ட்ரம்பைப் பற்றி சிணுங்குவதை ஐரோப்பா நிறுத்திவிட்டு உக்ரைனுக்கு என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று டச்சு பிரதமர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப், நவம்பரில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், பாதுகாப்பிற்காக போதுமான அளவு செலவழிக்கத் தவறிய நேட்டோ நட்பு நாடுகளை பாதுகாக்க மாட்டார் என்று கூறி ஐரோப்பாவில் சீற்றத்தை கிளப்பியுள்ளார். “டிரம்பைப் பற்றி புலம்புவதையும் சிணுங்குவதையும் நச்சரிப்பதையும் நாம் நிறுத்த வேண்டும்” என்று ரூட்டே மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் […]

இலங்கை

அளுத்கம – முகத்தில் வெட்டு காயங்களுடன் பெண்ணொருவர் மர்மமாக உயிரிழப்பு!

  • February 18, 2024
  • 0 Comments

வெட்டுக்காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம் நேற்று (17) இரவு 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரகல்ல – கலவிலவத்த பகுதியைச் சேர்ந்த எஸ்.ஷிராணி லக்ஷிகா குமாரி என்ற 47 வயதுடைய பெண்ணே உயிரிழந்ததார்.உயிரிழந்த பெண் முகத்தில் வெட்டுக்காயங்களுடன் வீட்டில் கிடந்ததாகவும், அவர் பேருவளை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, பொலிஸாரின் விசாரணைகளின் போது, […]

இலங்கை

DAT கொடுப்பனவு தொடர்பில் நாளை நடைபெறும் முக்கிய கலந்துரையாடல்!

  • February 18, 2024
  • 0 Comments

DAT கொடுப்பனவு தொடர்பில் சுகாதார நிபுணர் சங்கங்களுக்கும் சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவிற்கும் இடையில் நாளை (19.02) முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடலும் தோல்வியடையும் பட்சத்தில் நாளை (19) பிற்பகல் கூடி வேலைநிறுத்தம் தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக சுகாதார வல்லுநர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களில், 72 சுகாதார தொழிற்சங்கங்கள் கடந்த சில வாரங்களில் இரண்டு தடவைகள் பல நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, தமக்கும் அதிகரிக்கப்பட்டுள்ள DAT கொடுப்பனவான […]

பொழுதுபோக்கு

நடுவானில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு… மயிரிழையில் உயிர் தப்பிய ரஷ்மிகா

  • February 18, 2024
  • 0 Comments

நேஷனல் கிரஷ் நடிகை ராஷ்மிகா மந்தனா சென்ற விமானம் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதற்காக மும்பை வந்த ராஷ்மிகா, அதன் ஷூட்டிங்கிலும் பங்கேற்றார். இதையடுத்து மும்பையில் இருந்து ஐதராபாத் கிளம்பிய ராஷ்மிகா, தன்னுடைய விமான பயணம் குறித்து ஒரு பகீர் சம்பவத்தை பகிர்ந்துள்ளார். மும்பையில் இருந்து ஐதராபாத் கிளம்பிய விமானத்தில் நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் […]

தமிழ்நாடு

கோவை ராயல் கேர் இன்ஸ்ட்டியூட் ஆப் நர்சிங் கல்லூரியின் விளக்கேற்றும் விழா

  • February 18, 2024
  • 0 Comments

கோவை ராயல் கேர் இன்ஸ்ட்டியூட் ஆப் நர்சிங் கல்லூரியின் விளக்கேற்றும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. செவிலியத் துறையின் முன்னோடியான ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரை நினைவு கூறும் விதமாக,செவிலியர் பட்டபடிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பயிலும் செவிலியர் மாணவிகள்,விளக்கிளை கையில் ஏந்தி உறுதி மொழி எடுத்து கொள்வதை ஒவ்வொரு செவிலியர் கல்லூரிகளும் மரபாக பின்பற்றி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை ராயல் கேர் இன்ஸ்ட்டியூட் ஆப் நர்சிங் கல்லூரியின் விளக்கேற்றும் விழா கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள ராமலட்சுமி […]

உலகம்

இலங்கையின் இலக்கு இதுதான் : நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்!

  • February 18, 2024
  • 0 Comments

இலங்கை அண்மைக்காலமாக எதிர்கொண்டுள்ள மிகவும் சவாலான பொருளாதாரப் பிரச்சினை கடன் மறுசீரமைப்பு என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு இதுவரை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், ஜூன் மாதத்திற்குள் முழு கடன் மறுசீரமைப்பையும் நிறைவு செய்வதே இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வெளிநாட்டுக் கடன் பலதரப்பு மற்றும் இருதரப்புக் கடன் என இரு பகுதிகளைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட சியம்பலாபிட்டிய, பலதரப்புக் கடன் தொடர்ச்சியாக செலுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், இருதரப்பு வெளிநாட்டுக் […]

ஐரோப்பா

லண்டனில் பாலஸ்தீன ஆதரவு பேரணிக்கு ஏற்பாடு!

  • February 18, 2024
  • 0 Comments

மத்திய லண்டனில் பாலஸ்தீன ஆதரவு பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாலஸ்தீன ஒற்றுமை இயக்கம் இந்த எதிர்ப்பு பேரணியை ஏற்பாடு செய்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் அதில் இணைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு உடனடி போர் நிறுத்தம் தேவை என்று எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் மேற்கு லண்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகில் சென்ற முதலாவது போராட்டம் இதுவென அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். போராட்டத்தை கட்டுப்படுத்த சுமார் 1,500 […]

பொழுதுபோக்கு

சுந்தர் சி மற்றும் அனுராக் மோதும் One 2 One – மக்கள் செல்வன் குரலில் “சிங்கம் சிறுத்தை”

  • February 18, 2024
  • 0 Comments

இயக்குனர் திருஞானம் இயக்கத்தில், 24 Hours Production நிறுவனம் தயாரிப்பில், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையில் உருவாகும் புதிய திரைப்படம் One 2 One. இது சுந்தர் சி நடிப்பில் வெளியாகும் இருபதாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல இயக்குனரும் நடிகருமான அனுராக் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இரு வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட மனிதர்கள் மோதிக்கொள்ளும் ஒரு கதைக்களமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. ரியாஸ்கான் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த […]