இலங்கையில் சமாதான நீதவான் பதவிக்கான கல்வி தகைமை குறைப்பு!
இலங்கையில் சமாதான நீதவான் பதவிக்கான கல்வி தகைமை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சமாதான நீதவான் ஆக குறைந்த பட்ச கல்வி தகைமை க.பொ.த உயர்தர பரீட்சையில் 3 பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. கடந்த வருடம் நவம்பர் 27ம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் தெரியப்படுத்தப்பட்டது . இது தற்போது திருத்தப்பட்டு, இரண்டு தடவைகளுக்கு மேற்படாமல் க.பொ.த சாதரண தரப் பரீட்சையில் இரண்டு விசேட சித்திகளுடன் ஆறு பாடங்களில் சித்தியடைந்துள்ள ஆளொருவராக இருத்தல் வேண்டும். […]













