தமிழ்நாடு

கோவை ராயல் கேர் இன்ஸ்ட்டியூட் ஆப் நர்சிங் கல்லூரியின் விளக்கேற்றும் விழா

கோவை ராயல் கேர் இன்ஸ்ட்டியூட் ஆப் நர்சிங் கல்லூரியின் விளக்கேற்றும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

செவிலியத் துறையின் முன்னோடியான ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரை நினைவு கூறும் விதமாக,செவிலியர் பட்டபடிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பயிலும் செவிலியர் மாணவிகள்,விளக்கிளை கையில் ஏந்தி உறுதி மொழி எடுத்து கொள்வதை ஒவ்வொரு செவிலியர் கல்லூரிகளும் மரபாக பின்பற்றி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை ராயல் கேர் இன்ஸ்ட்டியூட் ஆப் நர்சிங் கல்லூரியின் விளக்கேற்றும் விழா கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள ராமலட்சுமி அரங்கில் நடைபெற்றது.ராயல் கேர் மருத்துவமனை மற்றும் நர்சிங் கல்லூரியின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளராக திருச்சூர் ஜூப்ளி மிஷன் செவிலியர் கல்லூரியின் முதல்வர் ஏஞ்சலா ஞானதுரை கலந்து கொண்டு செவிலியர் பணியில் உள்ள பல்வேறு அர்ப்பணிப்புகள் குறித்து பேசினார்.தொடர்ந்து நிகழ்ச்சியில் ராயல் கேர் செவிலியர் கல்லூரியின் முதல்வர் திலகவதி ராய் செவிலியர் உறுதிமொழியை முன்மொழிய மாணவ,மாணவிகள் விளக்கேற்றி உறுதி மொழி எடுத்தனர்…விழா இறுதியில், துணை முதல்வர் சுமிதா நன்றியுரை வழங்கினார்..விழாவில் மாணவ,மாணவிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்

You cannot copy content of this page

Skip to content