ஜெர்மனி ரயில் நிலையத்தில் மர்மப் பொருள் வெடிப்பு – இருவர் காயம்
ஜெர்மனியின் ஆக்ஸ்பர்க்கில் Augsburg உள்ள ஒரு ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத பொருள் ஒன்று வெடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் , 17 மற்றும் 18 வயதுடைய இருவர் லேசான காயங்களுடன் தப்பியதாக கூறப்படுகிறது.
இந்த வெடிப்பு ஒரு கட்டிடத்தின் நடைபாதையில் நிகழ்ந்ததாக பவேரியா மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் இரண்டு உக்ரேனிய குடிமக்கள் என்றும் மாநில காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இடம்பெற்று சில மணிநேரங்களில் மற்றொரு அடையாளம் தெரியாத பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ரயில் நிலையம் மூடப்பட்டதாகவும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இன்று அதிகாலையில், நகைக்கடை ஒன்றுக்கு முன்னால் கையெறி குண்டு ஒன்று வெடித்ததாகவும், ரயில் நிலையம் இலக்காக இருக்கவில்லை என்றும் பில்ட் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
வெடிகுண்டு குறித்த விவரங்கள் இன்னும் தெளிவாக இல்லை என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.




