இலங்கை

இலங்கையில் பேருந்தில் ஏறிய பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்தக் கதி!

சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை நடத்த பேருந்தில் ஏறிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வெலிமடை பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய தனியார் பாதுகாப்பு அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடு தழுவிய நீதி நடவடிக்கையுடன் இணைந்து பொது போக்குவரத்து சேவைகளில் பயணிக்கும் பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்