உலகம்

டிரம்ப்பை உக்ரைனுக்கு வருமாறு ஜெலென்ஸ்கி மீண்டும் அழைப்பு

உரிய ஆயுதங்கள் இன்றி ரஷ்ய ராணுவத்தை எதிர்கொள்வது கடினம் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மேற்கத்திய நாடுகளை எச்சரித்துள்ளார். மேலும், முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை உக்ரைனுக்கு வருமாறு மீண்டும் அழைப்பு விடுத்தார். அவர் வருவார் என்றால், அவருடன் முன்வரிசைக்கு செல்ல நான் தயாராக இருக்கிறேன்” என்று ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைனுக்கு நிதி அளிப்பது தொடர்பில் டொனால்டு ட்ரம்ப் தமது எதிர்ப்பை தொடர்ந்து முன்வைத்து வருகிறார். இந்நிலையிலேயே உண்மையான போர் என்பது எப்படி இருக்கும் என்பதை டொனால்டு […]

விளையாட்டு

பயிற்சியின் போது CSK வீரருக்கு நேர்ந்த பயங்கரம்..

  • February 18, 2024
  • 0 Comments

வங்கதேச பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்த முஸ்தபிசுர் ரஹ்மான் தலையில், பந்து பட்டு ரத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் IPL கிரிக்கெட் தொடரை போலவே, வங்கதேசத்தில் வங்கதேச பிரிமியர் லீக் (PPL) கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் அந்நாட்டு வீரர்கள் உட்பட பல வெளிநாட்டு வீரர்களும் விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் உள்ள கமிலா விக்டோரியன்ஸ் அணிக்காக அந்நாட்டு பந்துவீச்சாளர் […]

இலங்கை

‘அரசியல் விபச்சாரிகளை நமது தலைவர்கள் வரவேற்கக் கூடாது’ – முன்னால் MP சமிந்த விஜேசிறி

  • February 18, 2024
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தலைவர் சஜித் பிரேமதாச கூட, தங்கள் நலனுக்காக கட்சியில் சேருபவர்களால் தவறாக வழிநடத்தப்படக்கூடாது என்று SJB முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார். “நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னர் சுதந்திரமாகி புதிய அரசியல் கட்சிகளில் இணையும் சில அரசியல்வாதிகள் உள்ளனர். இந்த அரசியல் விபச்சாரிகளை நமது தலைவர்கள் வரவேற்கக் கூடாது. அவர்களை வரவேற்றால் கட்சியை அழித்துவிடுவார்கள். பொய்யான அரசியல் கூட்டணிகளுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுப்பதில் தவறில்லை” […]

இந்தியா

4 மாத குழந்தை படைத்த உலக சாதனை: நெகிழ்ச்சியில் பெற்றோர்கள்

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கைவல்யா என்ற 4 மாதக் குழந்தை நோபல் உலக சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறித்த குழந்தை மிகச்சிறிய வயதிலேயே காய்கறி, பழங்கள், பறவைகள், புகைப்படங்கள் என 120 வெவ்வேறு கொருட்களை அடையாளம் காணும் திறனால் இந்த சாதனையை படைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கைவல்யாவின் தாய் ஹேமா, தனது குழந்தையின் சிறப்புத் திறனைக் கண்டு, அதை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தார். குடும்பத்தினர் கைவல்யாவின் திறமைகளை வெளிப்படுத்தும் […]

தமிழ்நாடு

விருதுநகர்-10 பேரின் உயிரைப் பறித்த பட்டாசு ஆலை வெடிவிபத்து… ஒருவர் கைது; இருவருக்கு வலைவீச்சு

  • February 18, 2024
  • 0 Comments

விருதுநகரில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலையின் போர்மேனை கைது செய்துள்ள பொலிஸார் மேலும் இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த வெம்பக்கோட்டை அருகே உள்ள ராமதேவன்பட்டி கிராமத்தில், பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான இந்த ஆலையில், 55 அறைகளில் 150 க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு […]

உலகம்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

  • February 18, 2024
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் பால்க் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் மதிப்பு ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தி

இராணுவ வீரர்கள் நீளமாக முடி வளர்க்க அனுமதி

இராணுவத்தில் புதிதாக இணைபவர்கள் நீளமாக முடி வளர்ப்பதற்கு ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் குறித்த புதிய நடைமுறை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், புதிய விதிகளின்படி பெண்களும் நீண்ட கூந்தலை வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் சீருடையில் இருக்கும் போது தோள்களில் கூந்தல் விழ முடியாது – மற்றும் ஹெல்மெட் அணிவதில் தலையிடாதவாறு இருக்க வேண்டும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா மற்றும் வட கொரியா பற்றிய கவலைகள் அதிகரித்து வரும் […]

இலங்கை

அரையிறுதிக்கு தெரிவாகிய முல்லை மாவட்ட உதைபந்தாட்ட அணி.

  • February 18, 2024
  • 0 Comments

Friendship challenge Trophy Football Tournament ஆல் நடத்தும் அணிக்கு பதினொரு பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் காலிறுதி போட்டி நேற்றையதினம் (17.02.2024) யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. முதலாவது காலிறுதிப் போட்டியில் யாழ் லீக் மற்றும் முல்லை லீக் அணிகள் மோதியிருந்தது. இடைவேளையின் பின்னரான ஆட்டம் விறுவிறுப்பை பெற்றிருந்தது. இருப்பினும் ஆட்ட நேர முடிவில் 2-2 என்ற கோல்கணக்கில் சமநிலையில் போட்டி முடிவடைந்தது. சமனிலை தவிர்ப்பு உதை முடிவில் 4-3 என்ற கோல் கணக்கில் […]

பொழுதுபோக்கு

ஷங்கரின் மகளுக்கு இரண்டாவது திருமணம்; அதிதி போட்ட புகைப்படம்

  • February 18, 2024
  • 0 Comments

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி சங்கர் தன் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் தன்னுடைய அக்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளார். ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கிரிக்கெட் வீரர் ரோஹித்துடன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் ரோஹித் நடத்தி வரும் கிரிக்கெட் கோச்சிங் சென்டரில் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட தொல்லைகள் குறித்து புகார்கள் எழுந்தது. இதனால் ரோஹித் போக்சோ சட்டத்தில் கைது […]

செய்தி

உக்ரைனின் அவ்திவ்காவை கைப்பற்றிய ராணுவ வீரர்களுக்கு புடின் வாழ்த்து

உக்ரைனின் அவ்திவ்கா நகரைக் கைப்பற்றியதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இராணுவப் பிரிவுகள் மற்றும் அவர்களின் தளபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கிரெம்ளின் இணையதளம், பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்குவிடமிருந்து நகரத்தை கைப்பற்றியது குறித்த அறிக்கையை புடினுக்கு வழங்கியதாகக் கூறியது. மேலும் “சிறந்த இராணுவ நடவடிக்கைகளுக்காக, அவ்திவ்காவுக்கான போர்களில் பங்கேற்ற உங்கள் வழிகாட்டுதலின் கீழ் உள்ள அனைத்து துருப்புக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று புடின் கூறியதாக முகவர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.