ஐரோப்பா

ரஷ்ய சிறப்புப் படைகளின் தாக்கும் திறனை மேம்படுத்துவதாக புடின் சபதம்

ஷ்யாவின் சிறப்பு நடவடிக்கைப் படைகளின் இயக்கம் மற்றும் தாக்கும் திறனை அதிகரிக்க ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்துள்ளார். நாட்டின் இராணுவத்தை பலப்படுத்துவதற்கு இது ஒரு முக்கிய முன்னுரிமை என்று கூறியுள்ளார். மேலும் புதிய தலைமுறை ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களுடன் அவர்களுக்கு ஆயுதம் கொடுங்கள்” என்று புடின், ரஷ்யாவில் பிப்ரவரி 27 சிறப்பு நடவடிக்கை படை தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்து வீடியோ செய்தியில் கூறியுள்ளார். “இராணுவம் மற்றும் கடற்படையின் நீண்டகால வளர்ச்சிக்கான முக்கிய முன்னுரிமைகளில் இதுவும் ஒன்று […]

இந்தியா

தங்கைக்கு சொத்தை எழுதி வைத்ததால் தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த மகன்…!

  • February 27, 2024
  • 0 Comments

தனது சகோதரிக்கு சொத்தை எழுதி வைத்த தந்தையின் தலையில் கல்லைப் போட்டு மகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் மாண்டியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், மாண்டியாவில் உள்ள சுண்டில்லா கிராமத்தைச் சேர்ந்தவர் நஞ்சப்பா(65). இவரது மனைவி மகாதேவம்மா. இவர்களது மகன் மகாதேவன். சமீப காலமாக நஞ்சப்பாவுக்கும், அவரது மகன் மகாதேவனுக்கும் சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தன் சொத்து முழுவதையும் மகள் பெயரில் நஞ்சப்பா […]

இலங்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் தாமதம் மற்றும் ரத்து: வெளியான முக்கிய அறிவிப்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பல ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் தாமதமாக அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் இருந்து இன்றைய தினம் இடம்பெறவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவையின் 7 சேவைகள் தாமதாகியுள்ளன என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று (பிப்ரவரி 27) திட்டமிடப்பட்ட மூன்று ஸ்ரீலங்கன் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவரை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை (26) மூன்று […]

பொழுதுபோக்கு

இயக்குனராகிய பேத்தி மதிவதினிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பாரதிராஜா

  • February 27, 2024
  • 0 Comments

தமிழ் திரையுலகில் கிராமத்து படங்களை இயக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இயக்குனர் என்றால் அது பாரதிராஜா தான். எண்ணற்ற மண்வாசம் மிக்க படங்களை கொடுத்துள்ள இவர் தான் இன்றைய முன்னணி இயக்குனர்கள் பலருக்கும் ரோல் மாடலாக திகழ்ந்து வருகிறார். இவருக்கு மனோஜ் என்ற மகன் உள்ளார். ஆரம்பத்தில் நடிகராக ஒரு சில படங்களில் தலை காட்டி வந்த மனோஜ், பின்னர் இயக்குனராக அவதாரம் எடுத்தார். கடந்த ஆண்டு அவர் இயக்கத்தில் மார்கழி திங்கள் திரைப்படம் […]

ஆசியா

இந்திய இருமல் மருந்தால் உயிரிழந்த குழந்தைகள்… உஸ்பெகிஸ்தானில் இந்தியர் உட்பட 21 பேருக்கு சிறை

  • February 27, 2024
  • 0 Comments

இந்தியாவில் தயாரான தரக்குறைவான இருமல் மருந்தினை உண்டதில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இறந்ததில், இந்தியர் ஒருவர் உட்பட 21 பேருக்கு உஸ்பெகிஸ்தான் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்தியாவில் தயாராகும் மருத்துவம் மற்றும் மருந்துப் பொருட்களை நம்பி பயன்படுத்திய நாடுகளில் உஸ்பெகிஸ்தான் தேசமும் ஒன்று. வெளிநாடுகளில் விற்பனை செய்வதற்கு என்றே இந்தியாவில் தயாராகும் குறிப்பிட்ட மருந்துகளின் தரக்குறைவு, கலப்படம், விஷத்தன்மை ஆகியவை தாமதமாக மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டன. ஆனால் அதற்கு முன்னதாக, அந்த இருமல் மருந்தினை உட்கொண்ட குழந்தைகள் […]

வட அமெரிக்கா

கனடாவில் 13 மாதங்களான சிசுவொன்றை அடித்து கொன்ற கொடூர தந்தை!!

  • February 27, 2024
  • 0 Comments

கனடாவில் 13 மாதங்களான சிசுவொன்றை அடித்துக் கொன்ற தந்தைக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. சிசுவை அடித்துக்கொன்ற குறித்த தந்தைக்கு நீதிமன்றம் பதினாறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.சஸ்கட்ச்வான் நீதவான் இவ்வாறு தண்டனை விதித்துள்ளார். சஸ்கட்ச்வானின் பிரின்ஸ் அல்பர்ட் பகுதியைச் சேர்ந்த காயிஜ் ப்ராஸ் என்ற நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ம் திகதி 13 மாதங்களான டான்னர் ப்ராஸ் என்ற சிசுவை குறித்த நபர் கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் காரணமாக […]

உலகம்

திமோரில் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாள நிலநடுக்கம்..

  • February 27, 2024
  • 0 Comments

திமோர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி காலை 4.49 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக ஜெர்மனி புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது திமோரில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

  • February 27, 2024
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று குறிப்பிடத்தக்க வகையில் வலுவடைந்துள்ளது. மத்திய வங்கி இன்று (27.02) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அட்டவணையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 306.06 ரூபாவாகவும் விற்பனை விலை 315.72 ரூபாவாகவும் காட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

தமிழகத்தில் 2 பிள்ளைகளுடன் ரயில் முன் பாய்ந்த பெண்…

  • February 27, 2024
  • 0 Comments

தமிழக மாவட்டம் ராணிப்பேட்டையில் பெண்ணொருவர், தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ராணிப்பேட்டை மாவட்டம் வேலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் (39). இவர் ஓய்வு பெற்று ராணுவ வீரர் ஆவர். இவருக்கும் இரண்டாவது மனைவி வெண்ணிலாவுக்கும் (28) இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கணவன் – மனைவியிடையே மீண்டும் சண்டை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மனமுடைந்த வெண்ணிலா தற்கொலை முடிவை எடுத்துள்ளார். இதனையடுத்து அவர் தனது மகள்கள் […]

இலங்கை

காசாவில் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்காக இலங்கை முன்னெடுத்துள்ள புதிய திட்டம்!

  • February 27, 2024
  • 0 Comments

காஸா பகுதியில் இடம்பெற்ற மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் “காசா சிறுவர் நிதியம்” அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று (26.02) கூடிய அமைச்சரவையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டதுடன், அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டுக்கான இப்தார் கொண்டாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை இந்த நிதிக்கு வழங்குமாறு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு மக்களின் பங்களிப்பும் எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, பாதிக்கப்பட்ட […]