இலங்கை செய்தி

உலக சாதனைகளில் இணைந்த இலங்கையின் ஆப்பிள் விலை

  • February 27, 2024
  • 0 Comments

சந்தையில் விற்கப்படும் விலைகளின்படி, அதிக விலைக்கு ஆப்பிள் விற்பனை செய்யும் நாடாக இலங்கை மாறியுள்ளது. Numbeo அறிக்கைகளால் மேற்கோள் காட்டப்பட்டுள்ள நுகர்வோர் சுட்டெண்ணிற்கமைய, சந்தையில் ஆப்பிள் அதிக விலைக்கு விற்கப்படும் உலகின் இரண்டாவது நாடாக இலங்கை இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, இலங்கையில் ஒரு கிலோ ஆப்பிளின் விலை 7.04 அமெரிக்க டொலர்கள் அல்லது 2188 இலங்கை ரூபாவாகும். அந்த தரவரிசைப்படி, உலகிலேயே அதிக விலைக்கு ஆப்பிள் விற்கப்படும் நகரமாக நியூயார்க் நகரம் பெயரிடப்பட்டுள்ளது. ஒரு கிலோ ஆப்பிளின் […]

ஐரோப்பா

அயர்லந்தில் மரத்தைத் தூக்கி வீசியதால் 650,000 பவுண்ட் காப்புறுதிப் பணத்தை இழந்த பெண்

  • February 27, 2024
  • 0 Comments

அயர்லந்தில் பெண் ஒருவர் கிறிஸ்துமஸ் மரத்தைத் தூக்கி வீசும் போட்டியில் வெற்றி பெற்றதால் சுமார் 650,000 பவுண்ட் காப்புறுதிப் பணத்தை இழந்துள்ளார். 36 வயது கமிலா கிராப்ஸ்கா கார் விபத்தில் ஏற்பட்ட காயங்களுக்காகப் பணம் கோரி காப்புறுதி நிறுவனம் மீது வழக்குத் தொடுத்தார். 2017ஆம் ஆண்டு நேர்ந்த அந்தக் கார் விபத்தால் தமது முதுகிலும் கழுத்திலும் அடிபட்டதாக அவர் கூறினார். சுமார் 5 ஆண்டுகளுக்குத் தம்மால் வேலைக்குச் செல்ல முடியாது என்றும் பிள்ளைகளுடன் விளையாட முடியவில்லை என்றும் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஸ்மார்ட் மோதிரம் வெளியிட தயாராகும் Samsung!

  • February 27, 2024
  • 0 Comments

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது முதல் அணியக்கூடிய ஸ்மார்ட் மோதிரத்தை பார்சிலோனாவில் உள்ள மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் என்ற நிகழ்வில் வெளியிட திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் கலிபோர்னியாவில் நடந்த கேலக்ஸி எஸ் 24 சீரியஸ் வெளியிட்டு நிகழ்வில் கேலக்ஸி மோதிரம் கிண்டலுக்கு உள்ளான நிலையில், தற்போது முதல் முறையாக பொது வெளியில் காண்பிக்க சாம்சங் திட்டமிட்டுள்ளது. இந்த டெக்னலாஜி உலகில் டேப்லெட், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் டிவி போன்ற பல தொழில்நுட்ப அம்சங்களை கொண்ட […]

இலங்கை செய்தி

இலங்கை பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான சுற்றுநிருபம்!

  • February 27, 2024
  • 0 Comments

இலங்கையில் அதிக வெப்பமான வானிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதகமான சூழ்நிலைகளில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக வழிகாட்டுதல்கள் சில வௌியிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் அதிபர்களுக்கு அறிவிக்குமாறு அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, குறித்த அறிக்கையில் அதிக வெப்பமான வானிலை காரணமாக மாணவர்களுக்கு ஏற்படக்கூடும் நோய் நிலைமைகளும் அதற்கான முதலுதவிகள் குறித்தும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, அதிக வெப்பம் காரணமாக தசை பிடிப்பு, அதிக வேர்வை, […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்த முடியாமல் திணறல்

  • February 27, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்கள் நாடு கடத்தப்படுகின்ற நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஆனால் இதுவரையில் நாடு கடத்தப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டவர்களில் 50 வீதமானவர்கள் நாடு கடத்தப்பட முடியாத நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மன் அரசாங்கமானது நிராகரிக்கப்பட்ட அகதிகளை ஜெர்மன் நாட்டை விட்டு நாடு கடத்துவதற்காகன நடவடிக்கைகளை துரிதப்படுத்திக்கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் ஜெர்மனியின் சமஷ்டி பொலிஸார் வெளியிட்டுள்ள கருத்தில் கடந்த ஆண்டுகளில் 50 வீதமான நாடு கடத்தல் முயற்சி நடவடிக்கைகள் தோல்வி அடைந்துள்ளதாக தெரிவித்து இருக்கின்றது. […]

ஐரோப்பா

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

  • February 27, 2024
  • 0 Comments

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் சிறுவன் ஒருவர் கட்டிடத்தின் ஆறாவது தளத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். 17 ஆம் வட்டாரத்தில் இந்த சம்பமவ் இடம்பெற்றது. 8.30 மணி அளவில் அவரசப் பிரிவுக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 15 வயதுடைய சிறுவன் ஆறாவது தளத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். படுகாயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தின் போது சிறுவனின் சகோதரனும் அவர்களது தாயாரும் வீட்டில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் […]

இலங்கை செய்தி

இலங்கையில் திருமணத்திற்காக இளைஞன் தாயாருடன் இணைந்து செய்த மோசமான செயல்

  • February 27, 2024
  • 0 Comments

ஓபத்த கொட்டுகுடா பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவரும் அவரது தாயாரும் ஜாஎல பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது திருமணத்திற்குத் தேவையான பணத்தைத் தேடுவதற்காக கஞ்சா விற்பனை செய்தவரும் அவருக்கு உறுதுணையாக இருந்த தாயாருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு அவர்களிடம் இருந்து 2 கிலோ 170 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 24 வயதுடைய சந்தேகநபருக்கு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. அதற்காக அவருக்கு 15 லட்சம் ரூபா தேவைப்பட்டுள்ளது. பணத்தைக் […]

இந்தியா

பாஜகவில் தான் அரசியல் லட்சியங்களை நிறைவேற்ற முடியும் – வானதி சீனிவாசன்

  • February 26, 2024
  • 0 Comments

ஐ.எஸ்.ஓ.சான்றிதழ் தொடர்பாக பல விமர்சனங்கள் வருகிறது,எந்த நிறுவனம் ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்குவதற்கு தகுதியானது என நீங்கள் நினைக்கிறீர்களோ அந்த நிறுவனத்தை எனது அலுவலகத்திற்கு அனுப்புங்கள். பாஜகவில் இணைபவர்கள் அனைவரும் எங்கள் கட்சியில் கொள்கையை பிடித்து, புதிதாக வருபவர்களுக்கு அதிகமான வாய்ப்புகளை வழங்குகிறது என்பதை பார்த்து, பிரதமர் மோடியின் செயல்பாடுகளை பார்த்து இந்தக் கட்சி நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறது என்ற உன்னதமான உணர்வோடு வருகிறார்கள். பாஜகவில் இணைவதை பார்த்து பொறுக்க முடியாதவர்கள் சொல்வதுதான், இவ்வாறு பணம் நடக்கிறது, இல்லை […]

இலங்கை செய்தி

49 சதவீத அரசு அதிகாரிகளின் தொலைபேசிகள் செயலற்றுள்ளது

  • February 26, 2024
  • 0 Comments

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில், பொதுச் சேவை அதிகாரிகளின் தொலைபேசி இலக்கங்களில் 49%, அதாவது பாதியளவு செயலற்ற எண்கள் எனத் தெரியவந்துள்ளது. நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த கணக்கெடுப்பு பிரதேச செயலகத்தின் இணையத்தளத்தில் பதியப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் தமது கடமைகளை மேற்கொள்ளும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொலைபேசி இலக்கங்களை கணக்கில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு பிரதேச செயலகமும் கருத்தில் கொள்ளப்பட்டது, தொடர்புடைய எண்கள் பயன்பாட்டில் உள்ளதா?  […]

இந்தியா செய்தி

முஸ்லிம் வாக்குகளை மையமாக வைத்து இளைஞர்களை கவரும் பா.ஜ.க

  • February 26, 2024
  • 0 Comments

புதுடெல்லி- 2019 தேர்தலில் நாட்டின் 9% முஸ்லிம் வாக்குகளை பாஜக பெற்றுள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த முறையை விட 2024 பொதுத் தேர்தலில் அதிக முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்று பாஜக நம்புகிறது. இளம் முஸ்லிம் வாக்காளர்களை கவரும் முயற்சியில் கட்சி ஈடுபட்டுள்ளது. மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் இளம் வாக்காளர்களைக் கவர்ந்து வருகின்றன. ஒரு சில ஆண்டுகளில் நாட்டின் அனைத்து மூலைகளிலும் வளர்ச்சி எவ்வாறு சமமாக சென்றடைகிறது என்பதை இது காட்டுகிறது. கிராமப்புறங்களுக்கு […]