வட அமெரிக்கா

கனடாவில் 13 மாதங்களான சிசுவொன்றை அடித்து கொன்ற கொடூர தந்தை!!

கனடாவில் 13 மாதங்களான சிசுவொன்றை அடித்துக் கொன்ற தந்தைக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

சிசுவை அடித்துக்கொன்ற குறித்த தந்தைக்கு நீதிமன்றம் பதினாறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.சஸ்கட்ச்வான் நீதவான் இவ்வாறு தண்டனை விதித்துள்ளார்.

சஸ்கட்ச்வானின் பிரின்ஸ் அல்பர்ட் பகுதியைச் சேர்ந்த காயிஜ் ப்ராஸ் என்ற நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ம் திகதி 13 மாதங்களான டான்னர் ப்ராஸ் என்ற சிசுவை குறித்த நபர் கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதல் காரணமாக சிசு உயிரிழந்துள்ளது. இந்த பாதகச் செயலில் ஈடுபட்ட நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்தது.இந்த சம்பவம் இடம்பெற்ற போது ப்ராஸ் மது போதையில் இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்