உலகம்

எரிபொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு – ஈரானில் 11 பேர் கைது

ஈரானில் இருந்து எரிபொருளை கடத்திய குற்றச்சாட்டில் 11 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு தொலைக்காட்சி இன்று ஒளிபரப்பிய செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா ஈரான் துறைமுகங்களுக்குக் கடற்படை முற்றுகையை விதித்துள்ளதால், உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமான எரிபொருளை இறக்குமதி செய்வதில் ஈரான் சிரமங்களை எதிர்கொண்டுள்ளது.

இந்நிலையில் நாட்டின் தெற்குப் பகுதியில்  எரிபொருள் கடத்திய குற்றச்சாட்டில்,  எல்லைக் காவலர்கள் 11 வெளிநாட்டு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகைச் சோதனையிட்டபோது, ​​காவலர்கள் “382,000 லிட்டர் டீசல் எரிபொருளைக் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.

ஈரான் அதிகாரிகள் பல ஆண்டுகளாக, பரவலான எரிபொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர், குறிப்பாக வளைகுடாப் பகுதியிலுள்ள தெற்குப் பகுதிகளில் இது உள்ளூர் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்