உலகம் செய்தி

போர் விதி மீறல்: இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் இருவர் பலி!

  • April 22, 2026
  • 0 Comments

லெபனான் தெற்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கிடையில் தற்காலிக போர் நிறுத்தம் அமுலில் உள்ள சூழ்நிலையிலேயே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தெற்கு லெபனானில் உள்ள அட்-திரி பகுதியில் காரொன்றை இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் போர் நிறுத்த விதிமுறைகளை மீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும், ஹிஸ்புல்லா அமைப்பினர் போர் நிறுத்த விதிமுறையை மீறியதாலேயே தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, காசாவிலும் போர் நிறுத்தம் அமுலில் […]

இலங்கை செய்தி

டித்வா புயல்: மே இறுதிக்குள் இழப்பீடு வழங்கி முடிக்குமாறு பணிப்பு!

  • April 22, 2026
  • 0 Comments

டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார். டித்வா சூறாவளியால் பகுதியளவிலும் முழுமையாகவும் சேதமடைந்த வீடுகளில் வசித்தவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளை கையளிக்கும் பணிகள் தொடர்பாக இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்தில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். முழுமையாக சேதமடைந்த […]

ஐரோப்பா

ஜெட் எரிபொருள் தட்டுப்பாடு – 20000 விமானப் பயணங்கள் இரத்து!

  • April 22, 2026
  • 0 Comments

ஜெட் எரிபொருளின் அதிகரித்து வரும் விலையைச் சமாளிக்கும் பொருட்டு, லுஃப்தான்சா (Lufthansa) குழுமம் சுமார் 20000 பயணங்களை இரத்து செய்துள்ளது. அடுத்த ஆறு மாதங்களில் 40,000 மெட்ரிக் டன் எரிபொருளைச் சேமிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லுஃப்தான்சா நிறுவனத்தின் பிராந்திய துணை நிறுவனமான லுஃப்தான்சா சிட்டிலைன்  இயக்கும்  குறுகிய தூர விமானப் பயணங்களே முதன்மையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.  குறிப்பாக 27 விமானங்கள் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளன. மேற்படி விமான இரத்துக்கள் மே மாதத்தின் இறுதிவரை தொடரும் […]

உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் இரு கப்பல்களை கைப்பற்றிய ஈரான்!

  • April 22, 2026
  • 0 Comments

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படை, ஹோர்முஸ் ஜலசந்தியில் இரண்டு கப்பல்களைக் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. எம்.எஸ்.சி ஃபிரான்செஸ்கா ( MSC Francesca) மற்றும் எபமினோண்டாஸ் (Epaminondas)  என்ற  இரு கப்பல்களும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கவில்லை என  குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இந்த இரண்டு கப்பல்கள் மீது  முன்னதாகவும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் தற்போது கப்பல்கள் ஈரானின் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் குறித்த கப்பல்கள் எவ்வாறு கைப்பற்றப்பட்டன என்பது குறித்த மேலதிக விவரங்கள் […]

உலகம்

அமெரிக்க விமானப்படைத் தளத்தில் உக்ரைனின் ட்ரோன் தொழில்நுட்பம்!

  • April 22, 2026
  • 0 Comments

அமெரிக்க இராணுவம் சமீபத்திய வாரங்களில் சவூதி அரேபியாவில் உள்ள  முக்கிய அமெரிக்க விமானப்படைத் தளத்தில் உக்ரேனிய ஆளில்லா விமான எதிர்ப்புத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக விடயத்தை நன்கு அறிந்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்கை மேப்’ எனப்படும் உக்ரேனிய கட்டளை மற்றும் கட்டுப்பாட்டுத் தளம் ஒன்று இளவரசர் சுல்தான் விமானப்படைத் தளத்தில் நிலைநிறுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. உக்ரேனிய இராணுவ அதிகாரிகள், அமெரிக்கப் போர் வீரர்களுக்கு ஸ்கை மேப் கொண்டு பயிற்சி அளிப்பதற்காக சமீபத்திய […]

அரசியல் இலங்கை செய்தி

“தென்னிலங்கையில் தமிழர் விரோத அரசு” – அமைச்சர் கூறுவது என்ன?

  • April 22, 2026
  • 0 Comments

” தெற்கில் தமிழர் விரோத “அசுர அரசொன்று” இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன. நாம் அவ்வாறு செயல்படமாட்டோம். எம்மிடம் இனவாதம் கிடையாது.  தேசிய மக்கள் சக்தியென்பது இலங்கை மக்களுக்கான கட்சியாகும்.” என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, 984.73 மில்லியன் ரூபா மதிப்பில் குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்பின் இரண்டாவது கட்டப் பணிகள் இன்று (22.04.2026) ஆரம்பிக்கப்பட்டது. அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் […]

இலங்கை செய்தி

இரத்தினபுரியில் கறுப்பு ஆடை கும்பல் வெறியாட்டம்: சட்ட நடவடிக்கைக்கு வலியுறுத்து!

  • April 22, 2026
  • 0 Comments

இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்துக்குள் நுழைந்த ‘கறுப்பு ஆடை கும்பலுக்கு’ எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வலியுறுத்தியுள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பில் காவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோருடனும் பிரதி அமைச்சர் கலந்துரையாடியுள்ளார். அதேவேளை, காவத்தை பெருந்தோட்ட நிறுவனத்தின் பிரதானியை தொடர்புகொண்ட பிரதி அமைச்சர் பிரதீப் , எதற்காக தோட்டப்பகுதியில் இவ்வாறான கட்டமைப்பு (கறுப்பு கும்பல்) உருவாக்கப்பட்டது, இதன் பின்புலம் என்னவென்பது […]

உலகம்

புலம்பெயர்ந்தோரைத் தாயகம் அனுப்ப உதவும் வழக்கறிஞர்களுக்கு நிதி வெகுமதி! இத்தாலியில் சர்ச்சை!

  • April 22, 2026
  • 0 Comments

புலம்பெயர்ந்தோரைத் தாயகம் அனுப்ப உதவுகின்ற வழக்கறிஞர்களுக்கு நிதியளிக்கும் சர்ச்சைக்குரிய திட்டத்தில் மாற்றங்களை செய்ய தயாராக இருப்பதாக இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) அறிவித்துள்ளார். புலம்பெயர்ந்தோரை தாமாக முன்வந்து தாயகம் திரும்ப உதவும் வழக்கறிஞர்கள் அரசாங்கத்தின் நிதி வெகுமதியை பெறுவார்கள். இந்த செயன்முறை வெற்றிகரமாக முடிந்தால் மட்டுமே குறித்த நிதி வெகுமதி வழங்கப்படும். தொடர்புடைய சட்டமூலம் இந்தவாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது. இருப்பினும் குறித்த நடவடிக்கையை அரசியலமைப்புக்கு முரணானது என்று நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் சங்கங்கள் கண்டித்துள்ளனர். […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

ஈரான் போர் – இங்கிலாந்தின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

  • April 22, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் நுகர்வோர் விலை பணவீக்கம் பிப்ரவரியில் 3.0% ஆக இருந்த நிலையில், மார்ச் மாதத்தில் 3.3% ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய பணவீக்க நிலையானது ஈரான் போர் தாக்கத்தை பிரதிபலிக்கிறது. இந்தப் போர், தொடர்ந்தால்  பணவீக்கம் மீண்டும் உயர  வழிவகுக்கும் என்று இங்கிலாந்து வங்கி கவலை கொண்டுள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, தொழிற்சாலை விலைகளும் எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக உயர்ந்துள்ளன. பெரும்பாலும் எரிபொருளால் ஏற்பட்ட இந்த விலை உயர்வுகள், வட்டி விகிதங்களை உயர்த்தத் […]

உலகம் செய்தி

ஈரானில் தாக்குதலுக்கு இலக்கான 1,300 பாடசாலைகளில் 50 வீதமானவை சீரமைப்பு!

  • April 22, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களினால் ஈரானில் சேதமடைந்த 1,300 பாடசாலைகளில் பாதிக்கும் மேற்பட்டவை சீரமைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கல்வி அமைச்சர் அலிரேசா கசெமி Alireza Kazemi தெரிவித்தார். கடுமையாக சேதமடைந்த பாடசாலைகள், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் முழுமையாக சீரமைக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். போர்ச் சூழலால் தொலைக்காட்சி மற்றும் இணையவழி ஊடாக ஈரான் மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.