உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பற்ற சூழலுக்கு அமெரிக்கா, இஸ்ரேலே காரணம்!

  • April 23, 2026
  • 0 Comments

வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளே முக்கியக் காரணம் என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi குற்றஞ்சாட்டியுள்ளார். தெஹ்ரானில் தென்கொரிய தூதுவருடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே, மேற்படி ஆக்கிரமிப்பு தாக்குதல்களை உலக நாடுகள் உறுதியுடன் கண்டிக்க வேண்டும். தனது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய சர்வதேச சட்டங்களின்படி ஈரான் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வளைகுடாப் பகுதியில் […]

இந்தியா

ஈரோடில் 19.38 சதவீதம் வாக்குப் பதிவு!

  • April 23, 2026
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர். தற்போதைய நிலவரங்களின்படி, ஈரோடு மாவட்டத்தில் 19.38 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

இலங்கை செய்தி

சுரேஷ் சாலேமீதான தடுப்பு காவல் உத்தரவு நீடிப்பு!

  • April 23, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மீதான தடுப்புக் காவல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமரா இது தொடர்பான உத்தரவை நேற்று பிறப்பித்தார். குற்றப் புலனாய்வுப் பிரிவு , மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயை கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டவாளர் அசித் சிறிவர்தன, […]

இலங்கை செய்தி

சைபர் கும்பலிடம் சிக்கிய 2.5 மில்லியன் டொலர் திறைசேரி பணம்! விசாரணை தீவிரம்!

  • April 23, 2026
  • 0 Comments

நிதி அமைச்சின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பிற்குள் அங்கீகரிக்கப்படாத நபர் பிரவேசித்து, முன்னெடுத்த நிதித் திருட்டு தொடர்பாக சட்ட அமுலாக்க நிறுவனங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னான்டோ தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய ஏற்றுமதி நிதி முகவர் நிலையத்திற்கும் திறைசேரிக்கும் இடையிலான நிதி கொடுக்கல் வாங்கல்களின் போது, மின்னஞ்சல் மூலம் பரிமாறப்பட்ட தகவல்களை இணைய ஊடுருவிகள் இடைமறித்து மாற்றியமைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வழங்கப்பட வேண்டிய ஒரு கொடுப்பனவு தொடர்பாகவும், இதேபோன்ற […]

செய்தி

ஜனநாயக கடமையை நிறைவேற்றிய தமிழக தலைவர்கள்!

  • April 23, 2026
  • 0 Comments

சென்னை , நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கினை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதிவு செய்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமானது. 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில், இன்று காலை தனது ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில் தன் வீட்டில் இருந்து புறப்பட்ட விஜய், சென்னை – நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். இந்த தேர்தலில் சென்னை – பெரம்பூர் மற்றும் […]

செய்தி விளையாட்டு

உலக்கிண்ண தொடரில் இருந்து ஈரானை நீக்குமாறு ட்ரம்பின் தூதுவர் யோசனை!

  • April 23, 2026
  • 0 Comments

2026 உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை இணைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் சிறப்பு தூதுவரான பாலோ ஜாம்போலி Paolo Zampolli கோரிக்கை முன்வைத்துள்ளார். இவர் ட்ரம்பின் மிக முக்கிய சகாக்களில் ஒருவராகக் அறியப்படுகின்றார். ஊலகக்கிண்ண கால்பந்து தொடரில் ஈரான் அணி பங்கேற்கும் போட்டிகளில் அமெரிக்காவில் இருந்து மெக்சிக்கோவுக்கு மாற்றுமாறு, சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்திடம் FIFA ஈரான் கோரி இருந்தது. இதனை ஏற்கவில்லை. எனினும், ஈரான் உலக்கிண்ண தொடரில் பங்கேற்கும் என FIFA அறிவித்திருந்தது. […]

இலங்கை பொழுதுபோக்கு

சூர்யாவின் ‘கருப்பு’ படப்பிடிப்பில் அதிர்ச்சி: இலங்கை நடிகர் உயிரிழப்பு

  • April 23, 2026
  • 0 Comments

பிரபல தென்னிந்திய நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கொழும்பில் இடம்பெற்று வரும் நிலையில், அங்கு பணியாற்றிய இலங்கை நடிகர் ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சூர்யா தனது புதிய திரைப்படமான ‘கருப்பு’ படப்பிடிப்பிற்காக நேற்று முன்தினம் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இதன் படப்பிடிப்பு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த திரைபடத்திற்காக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாடாளுமன்றக் கட்டடம் போன்று படப்பிடிப்பு […]

இந்தியா

இந்தியாவில் பல வாகனங்கள் மோதி விபத்து – 11 பேர் பலி!

  • April 23, 2026
  • 0 Comments

இந்தியாவில் நேற்று நிகழ்ந்த வாகன விபத்தில் சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மிர்சாபூர் மாவட்டம், திராமண்ட்கஞ்ச் பகுதியில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திரமண்டகஞ்ச் பள்ளத்தாக்கிலிருந்து லசோடா பகுதியை நோக்கி செல்லும் பாதையில், வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த வாகனத்திற்கு பின்னால் வந்த லொறியொன்று அந்த வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மோதலின் போது இரண்டு லாரிகளுக்கு இடையில்  கார் ஒன்று சிக்கிக்கொண்டதாகவும், இதைத் தொடர்ந்து நடந்த […]

உலகம்

ஈரான் துறைமுகங்கள் முற்றுகை : பெரும்பாலான எண்ணெய் கப்பல்கள் திருப்பியனுப்பட்டன!

  • April 23, 2026
  • 0 Comments

ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட்டபோது திருப்பி அனுப்பப்பட்ட 31 கப்பல்களில் பெரும்பாலானவை எண்ணெய் டேங்கர்கள் என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) வெளியிட்டுள்ள பதிவில் மேற்படி கூறப்பட்டுள்ளது. அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பெரும்பாலான கப்பல்கள் அமெரிக்காவின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்துள்ளன. ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடும் இந்த நடவடிக்கையில் 10,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் படைகள், 17 போர்க்கப்பல்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ஈடுபட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

விளையாட்டு

முன்னாள் சாம்பியன்கள் இன்று மோதல்!

  • April 23, 2026
  • 0 Comments

IPL தொடரில் இன்று நடைபெறும் 33ஆவது லீக் ஆட்டத்தில் Mumbai Indians , Chennai Super Kings  ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரவு 7.30 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 2 ஆட்டங்களிலும் மும்பை அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா களமிறங்கவில்லை. தற்போது காயத்தில் இருந்து குணமடைந்துள்ள அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர், களமிறங்க அதிக […]