புலம்பெயர்ந்தோரைத் தாயகம் அனுப்ப உதவும் வழக்கறிஞர்களுக்கு நிதி வெகுமதி! இத்தாலியில் சர்ச்சை!
புலம்பெயர்ந்தோரைத் தாயகம் அனுப்ப உதவுகின்ற வழக்கறிஞர்களுக்கு நிதியளிக்கும் சர்ச்சைக்குரிய திட்டத்தில் மாற்றங்களை செய்ய தயாராக இருப்பதாக இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) அறிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்தோரை தாமாக முன்வந்து தாயகம் திரும்ப உதவும் வழக்கறிஞர்கள் அரசாங்கத்தின் நிதி வெகுமதியை பெறுவார்கள். இந்த செயன்முறை வெற்றிகரமாக முடிந்தால் மட்டுமே குறித்த நிதி வெகுமதி வழங்கப்படும்.
தொடர்புடைய சட்டமூலம் இந்தவாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது.
இருப்பினும் குறித்த நடவடிக்கையை அரசியலமைப்புக்கு முரணானது என்று நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் சங்கங்கள் கண்டித்துள்ளனர்.
மேலும், அரசியலமைப்பு காரணங்களுக்காக சட்டத்தில் கையெழுத்திட ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லா (Sergio Mattarella) மறுப்பு தெரிவித்துள்ளார்.
இத்தாலிய குற்றவியல் நீதிமன்றங்களின் ஒன்றியத்தின்படி, இந்த சட்டமூலம் “அரசியலமைப்பு மற்றும் சட்ட நெறிமுறைகளின் மிக அடிப்படையான கொள்கைகளுக்கு முரணானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இது “பாதுகாப்பு வழக்கறிஞர்களை அரசாங்கத்தின் மீள்குடியேற்றக் கொள்கைகளின் கருவியாக மாற்றுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மேற்படி சட்டமூலத்தில் திருத்தங்களை செய்ய தனது அரசாங்கம் தயாராகவுள்ளதாக மெலோனி அறிவித்துள்ளார்.




