போர் விதி மீறல்: இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் இருவர் பலி!
லெபனான் தெற்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கிடையில் தற்காலிக போர் நிறுத்தம் அமுலில் உள்ள சூழ்நிலையிலேயே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தெற்கு லெபனானில் உள்ள அட்-திரி பகுதியில் காரொன்றை இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் போர் நிறுத்த விதிமுறைகளை மீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனினும், ஹிஸ்புல்லா அமைப்பினர் போர் நிறுத்த விதிமுறையை மீறியதாலேயே தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, காசாவிலும் போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில் அங்கும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகின்றது.




