விளையாட்டு

முன்னாள் சாம்பியன்கள் இன்று மோதல்!

  • April 23, 2026
  • 0 Comments

IPL தொடரில் இன்று நடைபெறும் 33ஆவது லீக் ஆட்டத்தில் Mumbai Indians , Chennai Super Kings  ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரவு 7.30 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 2 ஆட்டங்களிலும் மும்பை அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா களமிறங்கவில்லை. தற்போது காயத்தில் இருந்து குணமடைந்துள்ள அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர், களமிறங்க அதிக […]

விளையாட்டு

2ஆவது இடத்துக்கு முன்னேறியது ராஜஸ்தான் அணி!

  • April 23, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை, 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆரம்பமே பின்னடைவாக அமைந்தது. லக்னோவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (22) மற்றும் வைபவ் சூர்யவன்ஷி (8) ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தனர். முகமது ஷமி, மொஹ்சின் கான் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் தலா 2 […]

உலகம் செய்தி

அமெரிக்க கடற்படை பிரதானி ராஜினாமா!

  • April 23, 2026
  • 0 Comments

அமெரிக்க கடற்படைச் செயலாளர் John Phelan தனது பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக பென்டகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போதைய அமெரிக்க நிர்வாகத்தில் உயர்மட்ட இராணுவத் தலைவர்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வரும் சூழலில், இவரது வெளியேற்றம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. புதிய பொறுப்பாளர் நியமிக்கப்படும் வரை, கடற்படை துணைச் செயலாளர் ஹங் காவ் தற்காலிகமாக இப்பணியை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்தாலும், John Phelanவிலகுவதற்கான குறிப்பிட்ட காரணம் எதையும் […]

உலகம்

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரஜை!

  • April 23, 2026
  • 0 Comments

கடந்த ஆண்டு அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புச் செயலாளராக இருந்த கிறிஸ்டி நோமிற்குச் ( Kristi Noem) சொந்தமான கைப் பையை திருடிய குற்றச்சாட்டில் சிலி நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 50 வயதான  மரியோ புஸ்டாமான்டே லெய்வாவ (Mario Bustamante Leiva) என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், சிறை தண்டனை நிறைவடைந்ததும் நாடு கடத்தப்படுவார் என ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. லெய்வா சட்டவிரோதமாக நாட்டிற்குள் […]

இலங்கை

மரக்கன்றுகளை நடுவதற்கான சுபநேரம் இன்று

  • April 23, 2026
  • 0 Comments

சிங்கள புத்தாண்டு சுபநேரப் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளவாறு, மரக்கன்றுகளை நடுவதற்கான சுபநேரம் அமைந்துள்ள நாள் இன்றாகும். அதற்கமைய, இன்று (23) காலை 9.01க்கு பொன்னிற ஆடைகளை அணிந்து, வடக்கு திசையை நோக்கி மரக்கன்றுகளை நடுவது உகந்தது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்தியா முக்கிய செய்திகள்

2026 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் ஆரம்பம்!

  • April 23, 2026
  • 0 Comments

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 5367 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 2.77 கோடி  ஆண்களும், 2.89 கோடி பெண்களும் அடங்குவர். இம்முறை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளன. இதனால் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 3,579 […]

இலங்கை செய்தி

மரத்துடன் மோதி பஸ் விபத்து: கிண்ணியாவில் 19 பேர் காயம்!

  • April 22, 2026
  • 0 Comments

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கை பாலத்திற்கு அருகே பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயமடைந்துள்ளனர். கிண்ணியா , மூதூருக்கிடையில் சேவையில் ஈடுபட்டு வரும் பஸ்ஸொன்றே இன்று (22) மாலை வீதியைவிட்டு விலகி மரத்துடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தோர் கிண்ணியா மற்றும் மூதூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்த சிலர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.  

உலகம் செய்தி

ஓரிரு நாட்களுக்குள் 2ஆம் சுற்று அமைதி பேச்சு: ட்ரம்ப் தகவல்!

  • April 22, 2026
  • 0 Comments

ஈரானுடன் அடுத்த சில நாட்களுக்குள் 2ஆம் சுற்று அமைதி பேச்சு நடத்தப்படுவதற்குரிய சாத்தியம் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். இதற்கமைய அடுத்த 36 முதல் 72 மணி நேரத்திற்குள் இரு நாடுகளுக்கும் இடையே உரையாடல் தொடங்கலாம் என அமைதி பேச்சுக்கு மத்தியஸ்தம் வகிக்கும் பாகிஸ்தான் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. தற்போதைய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்குரிய ஒருங்கிணைந்த திட்டத்தை ஈரான் அரசு தயாரிப்பதற்காக, டிரம்ப் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காலிக போர் […]

ஐரோப்பா

செர்னோபில் அணுமின் நிலையத்தை குறிவைக்கும் ரஷ்யா!

  • April 22, 2026
  • 0 Comments

உக்ரைனின் பயன்பாட்டில் இல்லாத செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் ரஷ்யா  ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் மேற்படி நடவடிக்கையானது பாரிய விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பை கணிசமாக அதிகரிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உக்ரைனின் தலைமை வழக்கறிஞர் ருஸ்லான் கிராவ்சென்கோ (Ruslan Kravchenko), முன்னர் அறிவிக்கப்படாத ரஷ்ய இராணுவ நடவடிக்கைகளை விவரித்துள்ளார். 2022 படையெடுப்பிலிருந்து செர்னோபில் மற்றும் க்மெல்னிட்ஸ்கி அணுமின் நிலையம் ஆகிய இரண்டும் ரஷ்யாவின் அதிவேக கின்ஷால் […]

இலங்கை செய்தி

பௌத்த மயமாக்கலுக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்!

  • April 22, 2026
  • 0 Comments

தமிழர் தாயகமான வடக்கு,கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று (22) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் இதற்குரிய ஏற்பாட்டைச் செய்திருந்தது. போராட்டத்தில் பங்கேற்றோர், பௌத்தமயமாக்கலை வன்மையாகக் கண்டித்தனர். அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர்.