ஐரோப்பா

ஜெட் எரிபொருள் தட்டுப்பாடு – 20000 விமானப் பயணங்கள் இரத்து!

ஜெட் எரிபொருளின் அதிகரித்து வரும் விலையைச் சமாளிக்கும் பொருட்டு, லுஃப்தான்சா (Lufthansa) குழுமம் சுமார் 20000 பயணங்களை இரத்து செய்துள்ளது.

அடுத்த ஆறு மாதங்களில் 40,000 மெட்ரிக் டன் எரிபொருளைச் சேமிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லுஃப்தான்சா நிறுவனத்தின் பிராந்திய துணை நிறுவனமான லுஃப்தான்சா சிட்டிலைன்  இயக்கும்  குறுகிய தூர விமானப் பயணங்களே முதன்மையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.  குறிப்பாக 27 விமானங்கள் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளன.

மேற்படி விமான இரத்துக்கள் மே மாதத்தின் இறுதிவரை தொடரும் என்றும், இது தொடர்பில் பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்