உலகம் செய்தி

ஈரானில் 54 ஆவது நாளாக தொடரும் இணைய முடக்கம்!

  • April 22, 2026
  • 0 Comments

ஈரானில் இணையத்தள முடக்கம் இன்று 54 ஆவது நாளாக தொடர்கின்றது. இது அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக உள்நாட்டில் வெடித்த போராட்டங்களால் ஆரம்பத்தில் இணையத்தள கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்நிலையில் போர்ச் சூழலால் அது மேலும் தீவிரமடைந்துள்ளது. சுமார் 1272 மணிநேரத்திற்கும் மேலாக நீடிக்கும் இந்தத் தடையால் பல வணிக நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் முடங்கியுள்ளன. ஷஇணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஈரானியர்கள் உலகத்தொடர்பு இன்றி பெரும் […]

இலங்கை செய்தி

சைவ சமயத்தை நெறிப்படுத்த தனிப்பீடம் அவசியம்!

  • April 22, 2026
  • 0 Comments

சைவ சமயத்துக்கு பிணக்குகளைத் தீர்ப்பதற்கும் நெறிப்படுத்துவதற்கும் அதிகாரமுள்ள உறுதியான பீடம் அல்லது சபையொன்று உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டாவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகளின் முதலாவது குருபூசை வைபவம், சித்திரைத் திருவாதிரை நாளான இன்று (22.04.2026) புதன்கிழமை காலை நல்லை ஆதீனத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , […]

இலங்கை

‘சொக்கா மல்லி’ பிணையில் விடுவிப்பு

  • April 22, 2026
  • 0 Comments

கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர என்ற ‘சொக்கா மல்லி’, சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை

இலங்கைக்குக் கைகொடுத்த பிலிப்பைன்ஸ்!

  • April 22, 2026
  • 0 Comments

இலங்கையில் அண்மையில் டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, மறுசீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் 100,000 அமெரிக்க டொலரை நிதியுதவியாக வழங்கியுள்ளது. இந்த நிதியுதவியை இலங்கையிலுள்ள பிலிப்பைன்ஸ் தூதுவர் நினா பி. கெய்ங்லெட் (Nina P. Cainglet), இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளதாக தனது எக்ஸ் (X) தளத்தில் அறிவித்துள்ளார். அதில், கடினமான இந்த மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் தருணத்தில், பிலிப்பைன்ஸ் அரசாங்கமும் அந்நாட்டு மக்களும் இலங்கைக்கு வழங்கிய […]

உலகம்

இடப்பெயர்வு முயற்சியில் 8000 பேர் பலி : IOM தகவல்!

  • April 22, 2026
  • 0 Comments

கடந்த ஆண்டு இடம்பெயர்வுப் பாதைகளில் கிட்டத்தட்ட 8,000 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது. இதில் ஐரோப்பாவிற்கான கடல் வழிப் பாதைகளே மிகவும் ஆபத்தானவையாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.நா.வின் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) நேற்று வெளியிட்ட அறிக்கையில் புதிய புள்ளிவிபரங்களுடன் இந்த விடயத்தை  சுட்டிக்காட்டியுள்ளது. அவ் அறிக்கையில், பாதிக்கப்பட்டவர்களில் பலர் “கண்ணுக்குத் தெரியாத கப்பல் விபத்துகளில்” தொலைந்து போனதாகக் கூறப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 82,000-ஐத் தாண்டியுள்ளது என்றும்,  சுமார் […]

உலகம் செய்தி

போர் நிறுத்தத்தைமீறி காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஒருவர் பலி!

  • April 22, 2026
  • 0 Comments

வடக்கு காசாவில் Jabalia பகுதியில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் பாலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். போரினால் சிதைந்த தமது வீட்டின் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போரினால் ஏற்கனவே முற்றிலும் அழிந்துபோன ஒரு பகுதியிலேயே இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காசாவில் போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையிலும் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கின்றது என்பதையே இது வெளிப்படுத்துகின்றது. போர் நிறுத்தத்தைமீறி இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஆயிரத்துக்கு […]

இலங்கை செய்தி

வடக்கு ஆளுநரை சந்தித்தார் பலாலி விமானப்படை தளபதி!

  • April 22, 2026
  • 0 Comments

பலாலி விமானப்படைத் தளபதி குரூப் கப்டன் டி.எஸ்.எஸ்.சுரங்க செனவிரத்ன மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான சம்பிரதாயபூர்வ சந்திப்பொன்று இன்று (22.04.2026) புதன்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இருவருக்குமிடையே மிகவும் சுமுகமான முறையில் அமைந்திருந்த இந்தச் சந்திப்பில், சமகால நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலனும் கலந்துகொண்டிருந்தார்.

உலகம்

புதிய பேச்சுவார்த்தைக்கு முன் போர் நிறுத்த மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும் – ஈரான்!

  • April 22, 2026
  • 0 Comments

“எந்தவொரு புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கும் முன்பு, அமெரிக்கா தனது ‘போர் நிறுத்த மீறலை’ நிறுத்த வேண்டும்,” என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது. ஈரானுக்கான ஐ.நா தூதர் அமீர்-சயீத் இரவானி (Amir-Saeid Iravani) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “அவர்கள் முற்றுகையை நீக்கியவுடன், அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இஸ்லாமாபாத்தில் நடைபெறும்,” என்று கூறிய அவர், ஈரான் எந்தவொரு சூழ்நிலைக்கும் தயாராக உள்ளது,” என்றும் குறிப்பிட்டார். மேலும் கருத்து வெளியிட்ட அவர், “நாங்கள் இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடங்கியவர்கள் அல்ல. அவர்கள் ஒரு அரசியல் […]

உலகம்

ஓமானுக்கு வடகிழக்கே பயணித்த கொள்கலன் கப்பல் மீது தாக்குதல்!

  • April 22, 2026
  • 0 Comments

ஓமானுக்கு வடகிழக்கே 15 கடல் மைல் (28 கி.மீ) தொலைவில் பயணித்த கொள்கலன் கப்பல் ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இங்கிலாந்து கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் (UKMTO) அமைப்பு இது தொடர்பில் தெரிவித்துள்ளது. UKMTO வெளியிட்ட அறிவிப்பில், ஐ.ஆர்.ஜி.சி-யின் (IRGC) துப்பாக்கிப் படகு ஒன்று கொள்கலன் கப்பலை நெருங்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாகவும், “கப்பலின் பாலத்திற்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தியதாகவும்” தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் தீ விபத்துகளோ அல்லது சுற்றுச்சூழல் பாதிப்போ ஏற்படவில்லை என […]

இந்தியா தமிழ்நாடு

தமிழகத்தை ஆளப்போவது யார்? நாளை தேர்தல்!

  • April 22, 2026
  • 0 Comments

ஜனநாயகத் திருவிழாவாகக் கருதப்படும் தேர்தல், தமிழகத்தில் நாளை (23) நடைபெறவுள்ளது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு ஆரம்பமாகும். பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 5.73 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பிரச்சார நடவடிக்கை நேற்றுடன் நிறைவடைந்து, தற்போது அமைதி காலம் அமுலில் உள்ளது. தமிழகத்தில் இம்முறை நான்கு முனை போட்டி நிலவுகின்றது.