இலங்கை செய்தி

இரத்தினபுரியில் கறுப்பு ஆடை கும்பல் வெறியாட்டம்: சட்ட நடவடிக்கைக்கு வலியுறுத்து!

இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்துக்குள் நுழைந்த ‘கறுப்பு ஆடை கும்பலுக்கு’ எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வலியுறுத்தியுள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் காவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோருடனும் பிரதி அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.

அதேவேளை, காவத்தை பெருந்தோட்ட நிறுவனத்தின் பிரதானியை தொடர்புகொண்ட பிரதி அமைச்சர் பிரதீப் ,

எதற்காக தோட்டப்பகுதியில் இவ்வாறான கட்டமைப்பு (கறுப்பு கும்பல்) உருவாக்கப்பட்டது, இதன் பின்புலம் என்னவென்பது பற்றி விளக்கம் கோரியுள்ளார்.

பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையேல் அதே இடத்தில் காணி வழங்கப்பட வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.

நடந்தது என்ன?

இரத்தினபுரி காவத்தை நீலகாமம் இல 01 பிரிவில், தோட்டத் தொழிலாளி ஒருவரின் வீடு அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் 22.04.2026 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

தோட்டங்களில் பாதுகாப்பு கடமைகளுக்கு என பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் என கூறிக்கொண்டு வந்த சில இனந் தெரியாதவர்களே, இவ்வாறு வீட்டை அடி உடைத்துள்ளனர் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

அனைவரும் தலையில் தலைகவசம் அணிந்திருந்தாகவும் வந்தர்கள் வீட்டில் இருந்தவர்கள் மீது சரமாரியான தாக்குதலுக்குதல் நடத்தியதில் தோட்டத் தொழிலாளி ஒருவர் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
கறுப்பு ஆடை அணிந்து. ‘ஹெல்மட்’டுடன் வந்த கும்பல் யார் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!