உலகம்

அமெரிக்க விமானப்படைத் தளத்தில் உக்ரைனின் ட்ரோன் தொழில்நுட்பம்!

அமெரிக்க இராணுவம் சமீபத்திய வாரங்களில் சவூதி அரேபியாவில் உள்ள  முக்கிய அமெரிக்க விமானப்படைத் தளத்தில் உக்ரேனிய ஆளில்லா விமான எதிர்ப்புத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக விடயத்தை நன்கு அறிந்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்கை மேப்’ எனப்படும் உக்ரேனிய கட்டளை மற்றும் கட்டுப்பாட்டுத் தளம் ஒன்று இளவரசர் சுல்தான் விமானப்படைத் தளத்தில் நிலைநிறுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரேனிய இராணுவ அதிகாரிகள், அமெரிக்கப் போர் வீரர்களுக்கு ஸ்கை மேப் கொண்டு பயிற்சி அளிப்பதற்காக சமீபத்திய வாரங்களில் அந்தத் தளத்திற்கு வருகை தந்ததாகவும் கூறப்படுகிறது.

ரஷ்யாவுடனான தனது நான்காண்டுப் போரில் நன்கு பக்குவப்பட்ட ஆளில்லா விமானம் மற்றும் ஆளில்லா விமான எதிர்ப்புத் தொழில்நுட்பங்களில் உக்ரேனிய இராணுவம் எந்த அளவிற்கு முன்னேறியுள்ளது என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்கை மேப், ஈரானால் உருவாக்கப்பட்ட ஷாஹெட் ட்ரோன்கள் உட்பட,  ட்ரோன் அச்சுறுத்தல்களைக் கண்டறிவதற்கும், இடைமறிக்கும் ட்ரோன்களைக் கொண்டு எதிர்த்தாக்குதல்களைத் தொடங்குவதற்கும் உக்ரேனிய இராணுவத்தால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!