உலகம்

ஹமாஸ் அமைப்புடன் இரகசிய பேச்சுவார்த்தையில் அமெரிக்கா

  • March 6, 2025
  • 0 Comments

பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஹமாஸ் அமைப்பினருடன் அமெரிக்கா இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் உண்மையாக இருக்குமாயின் 1997 ஆம் ஆண்டின் பின்னர் ஹமாஸ் அமைப்புடன் அமெரிக்கா பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது ஹமாஸ் தடுத்துவைத்துள்ள 59 பணயக்கைதிகளில் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் ஐவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஹமாஸ் அமைப்பிடம் உள்ள அனைத்து பணய கைதிகளை உடன் விடுவிக்க வேண்டும் என ஜனாதிபதி டொனால்ட் […]

பொழுதுபோக்கு

100 கோடியில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2… அமர்க்கலமாக ஆரம்பம்

  • March 6, 2025
  • 0 Comments

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்குகிறார். நயன்தாரா இப்படத்தில் அம்மனாக நடிக்கிறார். மேலும் ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் ரெஜினா, அபிநயா, இனியா, யோகி பாபு, துனியா விஜய், கருடா ராம், சிங்கம் புலி ஆகியோரும் இப்படத்தில் இணைந்துள்ளனர். ஆம், இவர்கள் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும் […]

இலங்கை

இலங்கையில் முன்னாள் பொலிஸ் உயர் அதிகாரிக்கு வலைவீச்சு

  • March 6, 2025
  • 0 Comments

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கைது செய்வதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன் தலைமறைவாகி உள்ள நிலையில், அவர் தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அறியத்தருமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். கைது செய்வதற்கான நடவடிக்கையில் பல பொலிஸ் குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும், யாராவது அவர் தலைமறைவாக இருப்பதற்காக உதவி புரிவார்களானால், அவர்களுக்கு […]

பொழுதுபோக்கு

நான் Incredible இளையராஜா” – லண்டன் புறப்பட்ட இளையராஜா பேட்டி

  • March 6, 2025
  • 0 Comments

இது என்னுடைய பெருமை அல்ல. நாட்டின் பெருமை. இந்தியாவின் பெருமை. Incredible இந்தியா மாதிரி, நான் Incredible இளையராஜா” என இசையமைப்பாளர் இளையராஜா பேசியுள்ளார். ‘வேலியன்ட்’ (Valiant) என்னும் தலைப்பில் இசைஞானி இளையராஜா இயற்றியிருக்கும் சிம்பொனி 2025 மார்ச் 8ஆம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் நேரடி நிகழ்ச்சியாக முதன்முறையாக அரங்கேற்றப்பட உள்ளது. இந்தியாவின் முதல் சிம்பொனி வெளிவர உள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்காக இன்று லண்டன் புறப்பட்டார் இசையமைப்பாளர் இளையராஜா. முன்னதாக சென்னை விமான […]

இலங்கை

இலங்கையில் உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டுபிடிப்பு

  • March 6, 2025
  • 0 Comments

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை முள்ளிமலையடி பிரதேசத்தில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் உருக்குலைந்துள்ள சடலம் ஒன்று இன்று வியாழக்கிழமை (06) அதி காலை மீட்கப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் கடந்த ஒரு கிழமையாக துர்நாற்றம் வீசி வந்துள்ள நிலையில் சந்தேகம் கொண்ட அப்பகுதி மக்கள் அந்த பகுதியை சுற்றி சோதனையிட்டபோது அங்கு மரம் ஒன்றில் தொங்கி உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இருப்பதை கண்டு புதன்கிழமை (05) இரவு பொலிஸாருக்கு […]

ஆஸ்திரேலியா

அதிக பயங்கரவாத ஆபத்து உள்ள 50 நாடுகள்

  • March 6, 2025
  • 0 Comments

அதிக பயங்கரவாத ஆபத்து உள்ள 50 நாடுகளில் ஆஸ்திரேலியாவும் பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்திய ஆய்வின்படி, அந்த 50 நாடுகளில் மேற்கத்திய நாடுகளாகக் கருதப்படும் 7 நாடுகளும் அடங்கும், மேலும் ஆஸ்திரேலியாவும் அவற்றில் ஒன்று. நேற்று (05) வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாத குறியீட்டின்படி, ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத ஆபத்து கடுமையானதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது முதன்மையாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவும் பல்வேறு மோதல்கள் மற்றும் உறுதியற்ற தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளது, இதில் காசா நெருக்கடியும் அடங்கும். 2023 […]

இலங்கை செய்தி

இலங்கையில் நடந்த சோகம் – தாயும் மகனும் மின்சாரம் தாக்கி பலி

  • March 6, 2025
  • 0 Comments

சூரியவெவ, ரந்தியாகம பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரு பெண்ணும் அவரது மகனும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 38 வயதான நான்கு பிள்ளைகளின் தாயான எனோஷா ஹர்ஷானி மற்றும் அவரது 5 வயது மகன் கங்கன இந்துவார ஆவர். நேற்று மாலை, இந்த சிறுவன் பாலர் பள்ளியிலிருந்து திரும்பி வந்து வீட்டின் பின்புறம் உள்ள பகுதியில் தனது சிறிய மிதிவண்டியில் விளையாடிக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில், வீட்டின் அருகே உள்ள நிலத்தில் ஒரு பேக்கரி மற்றும் நிறுத்தப்பட்டிருந்த லாரியைப் பாதுகாக்க […]

பொழுதுபோக்கு

சிவாஜியின் அன்னை இல்லம் பிரபுவுக்குத்தான் சொந்தம்… அதிரடி திருப்பம்

  • March 6, 2025
  • 0 Comments

நடிகர் சிவாஜியின் பேரன் துஷ்யந்த் படம் தயாரிக்க வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் சிவாஜியின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடனை 30% வட்டி உடன் தற்போது 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் ஆக செலுத்தவேண்டும். அதற்கு பதில் ஜகஜால கில்லாடி பட உரிமையை கேட்டார் பைனான்சியர், ஆனால் பட பணிகள் முடியவில்லை என அதற்கு மறுப்பு தெரிவித்து […]

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

நரகத்துக்குச் செல்ல வேண்டியிருக்கும் – காசாவிற்கு ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை!

  • March 6, 2025
  • 0 Comments

காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளை விடுவிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘நான் கூறுவதைப் போன்று நீங்கள் செய்யாவிட்டால் ஒரு ஹமாஸ் உறுப்பினரேனும் பாதுகாப்பாக இருக்க மாட்டார்’ என அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்துள்ளார். அந்த பணிகளை நிறைவு செய்வதற்கு இஸ்ரேலுக்கு தேவையான சகலவற்றையும் தாம் அனுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பணயக் கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் ஹமாஸ் தரப்பினர் நரகத்துக்குச் செல்ல வேண்டியிருக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்துள்ளார். பணயக் கைதிகள் தொடர்பில் ஹமாஸ் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் குடியேறியவருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை

  • March 6, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் குடியேறியவருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் உச்ச நீதிமன்றம், குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்காக அவர் இந்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார். பிரிஸ்பேன் குடியுரிமை விசா வைத்திருந்த 26 வயது பிலிப்பைன்ஸ் நபர் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் இந்தக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். பிலிப்பைன்ஸின் மணிலாவிலிருந்து பிரிஸ்பேன் விமான நிலையத்திற்கு வந்த இந்த நபர், தனது கையடக்க தொலைபேசியில் பல குழந்தை துஷ்பிரயோக வீடியோக்களை உருவாக்கியதற்காக 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 9 முதல் […]