வட அமெரிக்கா

வரி விதிப்பையடுத்து டொனால்ட் டிரம்பை தொடர்புக் கொண்ட கனடா பிரதமர்

  • March 6, 2025
  • 0 Comments

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன்னிடம் பேசியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் தெரிவித்தார். கனடா பொருட்களுக்கு இறக்குமதி வரி குறைப்பு தொடர்பாக தம்மை தொலைபேசியில் அழைத்து அவர் உரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து வலைதளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அவர், போதைக்கு பயன்படும் வலி நிவாரணி பெண்டானில் , கனடா வழியே அமெரிக்காவுக்கு கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று கேட்டதாக கூறினார்.

பொழுதுபோக்கு

வடிவேலு தொடர்ந்த மானநஷ்ட வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  • March 6, 2025
  • 0 Comments

நடிகர் சிங்கமுத்து Youtube சேனல்களில் அளித்த பேட்டியில் தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாய் மானநஷ்டஈடு வழங்க உத்தரவிட கோரியும், தன்னை பற்றி இனி அவதூறாக பேச கூடாது என்பதற்காக தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக விசாரணனையை மாஸ்டர் நீதிமன்றத்தில் உயர் நீதிமன்றம் மாற்றியது. இந்திய நிலையில் சாட்சியம் அளிப்பதற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு […]

வாழ்வியல்

பிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர் குடிப்பதால் ஆபத்து குறித்து எச்சரிக்கை…!

  • March 6, 2025
  • 0 Comments

பிளாஸ்டிக் பயன்பாடு இப்போது நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. சமையலறை பொருட்களை வைத்துக் கொள்வது முதல் தண்ணீர் பாட்டில்கள் வரை எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் தான். கோப்பைகள், தட்டுகள், ஸ்ட்ராக்கள் என அனைத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் நிரம்பியுள்ளன. பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கு கூடியவை. பிளாஸ்டிக் துகள்கள் பல்வேறு வழியில் நம் உடலில் நுழைந்து, பெரிய அளவில் ஆரோக்கியத்தை பாதிக்கின்றது. பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET) என்ற ரசாயனம் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பாலித்தீன் […]

ஐரோப்பா செய்தி

எந்தவொரு போரையும் எதிர்கொள்ள தயார் – அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா

  • March 6, 2025
  • 0 Comments

எந்தவொரு போரை எதிர்கொள்ளவும் தனது நாடு தயாராக இருப்பதாக சீனா அமெரிக்காவை எச்சரித்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய வரிகளை விதித்ததற்கு இது முதல் அதிகாரப்பூர்வ வாய்மொழி பதிலாகும். உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான சீனாவும் அமெரிக்காவும், டிரம்ப் அனைத்து சீனப் பொருட்களுக்கும் புதிய வரிகளை விதித்த பிறகு, வர்த்தகப் போரை நோக்கி நகர்ந்து வருவதாக விமர்சகர்கள் தெரிவித்தனர். அமெரிக்காவின் வரிகளுக்கு உடனடி பதிலடியாக, சீனா அமெரிக்க விவசாயப் பொருட்கள் […]

இலங்கை செய்தி

இலங்கையில் சில இடங்களில் இன்று மழை

  • March 6, 2025
  • 0 Comments

இலங்கையில் சில இடங்களில் இன்று மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாகச் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் முடிவெடுக்கும் திறன் 54% அதிகரிப்பு

  • March 6, 2025
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் முடிவெடுக்கும் திறன் 54 சதவீதம் அதிகரித்துள்ளது என சிஐஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு குறித்த இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) 4-வது சர்வதேச கருத்தரங்கு, ‘தி ஏஐ இந்தியா கண்காட்சி 2025’ என்ற பெயரில் நடத்தப்பட்டது. இதில் ‘செயற்கை நுண்ணறிவின் போக்கு மற்றும் எதிர்கால தாக்கம்’ என்ற பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதை பிராட்டிவிட்டி என்ற உலகளாவிய ஆலோசனை நிறுவனமும், சிஐஐ அமைப்பும் இணைந்து தயாரித்தது. இதில் கூறியிருப்பதாவது: செயற்கை நுண்ணறிவு(ஏஐ) […]

ஆசியா

சீனாவில் பெண்களின் திருமண வயதில் ஏற்படவுள்ள மாற்றம்

  • March 6, 2025
  • 0 Comments

சீனாவில் பெண்களின் திருமண வயதை குறைக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 20ல் இருந்து 18 ஆக வயது குறைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்துவருவதால், அதனை அதிகரிக்கும் நோக்கில், பெண்ணின் திருமண வயதைக் குறைக்கும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது. சீனாவில் தற்போது ஆண்களின் திருமண வயது 22 ஆகவும் பெண்களின் திருமண வயது 20 ஆகவும் உள்ளது. உலக அளவில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது அதிகமாகும். இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளை […]

விளையாட்டு

ICC தரவரிசை: விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் முன்னேற்றம்!

  • March 6, 2025
  • 0 Comments

ஐசிசியின் ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் முன்னேற்றம் பெற்றுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமை வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த வாரத்துக்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்கள் இந்தப் பட்டியலில் முன்னேற்றம் பெற்று வருகின்றனர். அதன்படி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் பெற்றுள்ளனர். ஷ்ரேயஸ் ஐயர் ஒரு […]

ஐரோப்பா

ரஷ்யாவில் பயணப்பெட்டிகளில் மனித உடல் – கண்டுபிடித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • March 6, 2025
  • 0 Comments

ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள நதியொன்றில் உயிரிழந்த ஒருவரின் உடல் உறுப்புகள்கொண்ட இரு பயணப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒரு பெட்டியில் உயிரிழந்தவலின் உடலின் மேற்பகுதி பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டிருந்தது.ஆனால், உள்ளுறுப்புகள் எதுவும் காணப்படவில்லை. மற்றொரு பெட்டியில் உயிரிழந்தவரின் தலை, கைகள், கால்கள் வைக்கப்பட்டுள்ளது. உடலைப் பரிசோதித்த அதிகாரிகள் தலை, கன்னங்கள், தாடைப் பகுதிகளில் கடுமையான காயங்கள் இருந்ததாக கூறியுள்ளார். உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அவர் 20இலிருந்து 30 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. […]

இலங்கை

இலங்கையில் ஆறு பேரில் ஒருவர் வறுமையில் பாதிப்பு

  • March 6, 2025
  • 0 Comments

இலங்கையில் ஆறு பேரில் ஒருவர் வறுமையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சர் உபாலி பன்னிலகே இதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கிராமிய வறுமை இந்த நாட்டிற்கு ஒரு பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. நம் நாட்டில் ஆறு பேரில் ஒருவர் வறுமையில் இருக்கிறார். அவர்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானோர் கிராமப்புற மற்றும் தோட்டப் பகுதிகளில் வசிக்கின்றனர். கிராமப்புற வறுமையை ஒழிப்பது தொடர்பில் தற்போதைய அரசாங்கம் முக்கியமாகக் கவனம் செலுத்தியுள்ளது. கிராமப்புற, அரை […]