இந்தியா செய்தி

வினாத் தாள்களை கசியவிட்டால் 10 ஆண்டுகள் சிறை: அமைச்சரவை அனுமதி

தேர்வு வினாத்தாள் கசிந்தால், அதற்கு காரணமானவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 10 கோடி ரூபா (இந்திய மதிப்பில்) அபராதமும் விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தேர்வு வினாத்தாள் கசிந்தால், அதற்கு காரணமானவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 10 கோடி ரூபா (இந்திய மதிப்பில்) அபராதமும் விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் முன்வர வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது.

தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் அல்லது அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; அதன் பிறகுதான் பேச்சுவார்த்தையிலோ அல்லது விவாதத்திலோ பங்கேற்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

இந்நிலையில், இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேர்வு முறைகேடுகளைத் தடுப்பதற்கான ‘பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளை தடுத்தல்) சட்டம் 2024-ல் கடுமையான திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி