ஐரோப்பா செய்தி

பிரான்ஸின் பாரம்பரியமிக்க உணவுக்கு தடை – பிரேசில் ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை

பிரேசிலில்   ஃபோய் கிராஸின் விற்பனை மற்றும் உற்பத்தியைத் தடைசெய்யும் சட்டமூலத்தில் அந்நாட்டின் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா  சில்வா (Luiz Inacio Lula da Silva) கையொப்பம் இட்டுள்ளார்.

விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவதை காரணம் காட்டியே அவர் இந்த சட்டமூலத்தில் கையொப்பம் இட்டுள்ளதாக தெரியவருகிறது.

கொழுத்த வாத்து மற்றும் கூஸ் ஈரல்களில் இருந்து தயாரிக்கப்படும் ஃபோய் கிராஸ்   பிரான்ஸின் பாராம்பரிய மிக்க சிறப்பு உணவாக காணப்படுகிறது.

ஆனால், வாத்துகள் அல்லது கூஸ் பறவைகளின் ஈரல்களைப் பெரிதாக்குவதற்காக அவற்றுக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டும் நடைமுறையை விலங்குரிமை ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர்.

இந்நிலையல் பிரேசிலின் ஃபோய் கிராஸ் உற்பத்தி மிகக் குறைவாகவே காணப்படுகிறது. பெரும்பாலும் அவை பிரான்ஸில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

ஆகவே சமீபத்திய   தடை,  பிரான்ஸ் உடனான வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டுவரும்.

ஏப்ரல் மாதம் சட்டமியற்றுபவர்கள் இந்தத் தடையை அங்கீகரித்தபோது, ​​சட்டமூலத்தை வீட்டோ செய்யுமாறு லூலா மீது பிரெஞ்சு தூதர்கள் அழுத்தத்தை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி