உலகம்

பாகிஸ்தான் சோதனைச் சாவடி மீது குண்டுத் தாக்குதல் – 15 பேர் உயிரிழப்பு

வடமேற்கு பாகிஸ்தானில் இஸ்லாமிய தீவிரவாதிகள் இன்று நடத்திய குண்டுத் தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய தீவிரவாதிகள் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரெக்கை பாகிஸ்தானின் எல்லை சோதனைச் சாவடியில் மோதச் செய்து இந்த தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர்.

இதில் 12 இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்ளடங்களாக 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதலில் 12  தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள டாங்க் மாவட்டத்தில், ராணுவம் மற்றும் காவல்துறை இணைந்து கண்காணப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப்பகுதி நீண்ட காலமாக இஸ்லாமிய தீவிரவாதிகளின் புகலிடமாக இருந்து வருகிறது. சமீபத்திய மாதங்களில் வடமேற்கு பாகிஸ்தானில் தீவிரவாதம் கடுமையாக அதிகரித்துள்ளது.

தலிபான்கள், 2007-ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அரசை கவிழ்த்து, தங்களின் கடுமையான இஸ்லாமிய ஆட்சி முறையை அதன் இடத்தில் நிறுவும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்