இலங்கையில் உச்சபட்ச வெப்பநிலை திருகோணமலையில் பதிவு
நாட்டில் இன்று உச்சபட்சமாக 39.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை திருகோணமலை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலை பொலன்னறுவை மாவட்டத்தில் 38.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.
அதேபோல் வவுனியாவில் – 37.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், மொனராகலையில் 37.3 டிகிரி செல்சியஸ்
வெப்பநிலையும், முல்லைத்தீவில் 37.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.





