செய்தி

காட்டுத் தீயை கட்டுப்படுத்த கடும் போராட்டம்: பிரான்ஸ், ஸ்பெயினுக்கு விமானங்கள் அனுப்பி வைப்பு

காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தீயணைப்புக் குழுவிலிருந்து 11 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் (Ursula von der Leyen) தெரிவித்துள்ளார்.

காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தீயணைப்புக் குழுவிலிருந்து 11 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் (Ursula von der Leyen) தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘rescEU’ குழுவிலிருந்து ஐந்து விமானங்கள் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்கள் பிரான்ஸிலும், நான்கு விமானங்கள் சனிக்கிழமையன்று ஸ்பெயினிலும் களமிறக்கப்பட்டுள்ளதாக விளக்கியுள்ளார்.

காட்டுத் தீ காரணமாக ஸ்பெயினின் மாட்ரிட் மற்றும் அவிலா (Ávila) ஆகிய பகுதிகளிலிருந்து மொத்தம் 59,488 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 28,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர் என்று ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, வெளியேற்றப்பட்ட மற்றும் வீடுகளுக்குள் முடங்கியுள்ள மக்களின் எண்ணிக்கை விபரம்:

அவிலா மாகாணம்:

வீடுகளுக்குள் முடங்கியுள்ளோர் – 8,000

வெளியேற்றப்பட்டோர் – 30,000

மாட்ரிட் சமூகம் (Community of Madrid):

வீடுகளுக்குள் முடங்கியுள்ளோர் – 20,262

வெளியேற்றப்பட்டோர் – 29,488

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி