இத்தாலியில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு : வீதியில் தஞ்சமடைந்த மக்கள்
இத்தாலியின் ஐசெர்னியா (Isernia) மாகாணத்தில் உள்ள பிஸ்ஸோன் (Pizzone) என்ற இடத்தில் இன்று நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது 4.1 ரிக்டர் அளவில் பதிவானதாக அந்நாட்டின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் நிறுவனம் (ஐஎன்ஜிவி) தெரிவித்துள்ளது.
செர்னியா (மோலிஸ்) மாகாணத்தில் உள்ள பிசோனில் (Pizzone) சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கமானது மாகாணம் முழுவதும் உணரப்பட்டதாகவும், மக்கள் பலரும் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரங்களில் அதே பகுதியில் 9 கிலோமீட்டர் ஆழத்தில் 2.2 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காயம் மற்றும் சேதவிபரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.




