“ராஜா வந்தரே!! ராணி பின்னாலே” – சூர்யா பாடியுள்ள தி வெடிங் சாங்’ வெளியீடு
வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘தி வெடிங் சாங்’ லிரிக் வீடியோ இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள இப்பாடலை, நடிகர் சூர்யாவே தனது சொந்தக் குரலில் பாடியுள்ளார் என்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.




