ஈரான்மீதான தடையை நீக்கமுடியாது: பிரான்ஸ் திட்டவட்டம்
லெபனானில் நிலவும் போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா, இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.
லெபனானிலும் நிலையான அமைதியை ஏற்படுத்த தமது நாடு முயற்சித்துவருகின்றது என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் Jean-Noel Barrot தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தாலும் , இஸ்ரேல் தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இது நிறுத்தப்பட வேண்டும் என்பதே பிரான்ஸின் கோரிக்கையாகும்.
அதேவேளை, ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும் வரை அந்நாடுமீதான தடைகளை நீக்க முடியாது என்றும் பிரான்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.




