ஐரோப்பா செய்தி

மாற்றத்துக்கு வழிவிடுங்கள்: பிரித்தானிய பிரதமரிடம் கோரிக்கை

பிரித்தானியாவின் சவுத்போர்ட் (Southport) தொகுதி லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பேட்ரிக் ஹர்லி

“புதிய மாற்றத்திற்கான சூழல் தற்போது தேவைப்படுகிறது” – என்று பிரித்தானியாவின் சவுத்போர்ட் (Southport) தொகுதி லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Patrick Hurley தெரிவித்துள்ளார்.

லேபர் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் அவசியம் என வலியுறுத்தப்பட்டுவரும் சூழ்நிலையிலேயே இவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய பிரதமர் Keir Starmer தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

” லேபர் கட்சியின் அரசியல் வரலாற்றில் கீர் ஸ்டார்மர் ஒரு மாபெரும் தலைவராக நினைவுகூரப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், எல்லாவற்றிற்கும் ஒரு காலமுண்டு. தற்போதைய சூழலில் நமக்கு ஒரு புதிய வடிவத்திலான மாற்றம் அவசியமாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பத்தாண்டுகளாக பிரித்தானியா எதிர்கொண்டு வரும் முக்கியப் பிரச்சினைகளுக்கு, தற்போதைய அரசு வெறும் ‘ஆய்வுக் குழுக்கள்’ அல்லது ‘விசேட பணிக்குழுக்கள் ‘ (Task Forces) அமைப்பதையே தீர்வாக வழங்கிவருகின்றது.” என Patrick Hurley அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

எனினும், கட்சியில் உடனடித் தலைமைத்துவத் தேர்தல் ஒன்றை தான் விரும்பவில்லை என்று கூறிய அவர், நாடாளுமன்ற லேபர் கட்சியினதும், நாட்டு மக்களினதும் விருப்பம் என்ன என்பது இப்போது தெளிவாகத் தெரிந்த ஒன்றே என்றும் சுட்டிக்காட்டினார்.

எனவே, பிரதமர் கீர் ஸ்டார்மர் இப்போதே ஒரு புதிய மாற்றத்திற்கான வழிமுறைகளையும், அதற்கான செயல்முறைகளையும் வகுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரான Patrick Hurley அறைகூவல் விடுத்தார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி