Consent Preferences
உலகம்

பிரேசில் மத்திய வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாகி கைது

பிரேசில் மத்திய வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாகி நேற்று கூட்டாட்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயரடுக்கு அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட மோசடி விசாரணையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாங்கோ மாஸ்டர் வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பங்குதாரராகவும் இருந்த அகஸ்டோ லிமா Augusto Lima என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசியல்வாதிகளுடன் தொடர்பான மோசடியான கடன் தொகுப்புகள் குறித்த குற்றச்சாட்டுகள் காரணமாக மத்திய வங்கி கலைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வங்கியின் தலைவர் டேனியல் வோர்காரோ Daniel Vorcaro   கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில்  லிமாவும் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் முந்தைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இணங்கத் தவறியதாக கூறி கூட்டாட்சி காவல்துறை மீண்டும் கைது செய்துள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்