பாகிஸ்தான் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் – பலி எண்ணிக்கை உயர்வு
பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில், பாடசாலை கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதில் ஆசிரியர் உட்பட குறைந்தது 27 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் 13 வயதுக்குட்பட்டவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
தனியார் பள்ளியான ‘அல்-கைர் கல்வி மையத்தில்’ (Al-Khair Education Center) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறைந்தது 45 குழந்தைகளை வெளியே கொண்டு வந்துள்ளதாக மாவட்ட அவசரக்கால அதிகாரி இப்திகார் கான் தெரிவித்தார்.
இன்னும் சில குழந்தைகள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்று தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.




