ஐரோப்பா

இங்கிலாந்தின் சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ள வறட்சி

இங்கிலாந்தின் சில பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்நினோ தாக்கத்தின் காரணமாக மழைபொழிவில் ஏற்பட்டுள்ள தாமதம் இந்நிலைக்கு காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய சுற்றுச்சூழல் முகமை வெளியிட்ட தரவுகளின்படி, கார்ன்வால், டெவோன், டோர்செட், சோமர்செட், கிழக்கு சசெக்ஸ் மற்றும் மேற்கு சசெக்ஸ் ஆகிய பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான குடிநீர் தடையின்றி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆற்று மட்டங்களை தினசரி கண்காணிக்கவும், மேலும் கடுமையான நீர் தரக் கண்காணிப்பை மேற்கொள்ளவும் நீர் நிறுவனங்களுக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இயற்கை நீர் ஆதாரங்களில் இருந்து நீரை எடுக்கும் நிறுவனங்கள், அனுமதிக்கப்பட்ட அளவு நீரை மட்டுமே எடுக்கின்றனவா என்பதை உறுதி செய்வதற்காக, சுற்றுச்சூழல் முகமை அவற்றின்  சோதனைகளை அதிகரிக்கும்  என்றும் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்