ஐரோப்பா

4,400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கப்பலின் சிதைவுகள் கண்டுப்பிடிப்பு

துருக்கியின் கடற்கரைக்கு அப்பால் உலகின் மிகப் பழமையான கப்பல் சிதைவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இவை சுமார்  4,400 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை எனக் குறிப்பிடப்படுகிறது.

துருக்கியின் கெகோவா தீவின் கடற்கரைக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆரம்ப வெண்கலக் காலத்தைச் சேர்ந்ததும், சுமார் 10 மீட்டர் நீளமுடையதுமான இந்தக் கப்பல், மத்திய தரைக்கடல் முழுவதும் பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டது.

கப்பலின் மரப் பகுதிகள் முற்றிலும் சிதைந்துவிட்ட போதிலும், ஆம்போராக்கள் (Amphorae)  எனப்படும் 30க்கும் மேற்பட்ட மட்பாண்டங்களும், கல் நங்கூரங்களும் கடற்பரப்பில் சிதைவின்றி கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்தப் பாத்திரங்களை மேற்பரப்பிற்குக் கொண்டு வந்து ஆய்வு செய்தபோது, ​​அவற்றில் சிலவற்றில் ஆலிவ் எண்ணெய், ஒயின் அல்லது மரச்சாறு போன்ற பொருட்களின் பிசின் எச்சங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பண்டைய உலகின் வர்த்தகப் பாதைகள் மற்றும் கடல்சார் வரலாறு குறித்த முக்கியத் தகவல்களை வெளிப்படுத்தும் இந்தத் தொல்பொருள் கண்டுபிடிப்புகள், துருக்கியின் அன்டால்யாவில் புதிதாகத் திறக்கப்பட்ட   தொல்பொருள் அருங்காட்சியகத்தில் விரைவில் காட்சிக்கு வைக்கப்படும்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்